78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி உடல் நலக்குறைவால் காலமான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்...

உடல் நலக்குறைவால் காலமான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதியின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

செப்டம்பர்- 03

உடல் நலக்குறைவால் காலமான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதி அவர்களின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதி (வயது 55) என்பவர் உடல் நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேற்று காலமானார்.

இவர் 1988ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 32 ஆண்டுகள் சிறப்பான முறையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி பதவி உயர்கள் பெற்று, தற்போது திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு வள்ளியம்மாள் (45) என்ற மனைவியும், இசக்கி திவான் (23) மற்றும் இசக்கி சுதீஷ் (4) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பூருக்கு கொண்டு வரப்பட்டு இன்று (03.09.2020) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச்சடங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத், ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், திருச்செந்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்