94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சென்னை இளஞ்சிறார்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தை காக்கும் பாதுகாவலர்களாக உருவாக வேண்டும் என்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

இளஞ்சிறார்கள் எதிர்காலத்தில் சமுதாயத்தை காக்கும் பாதுகாவலர்களாக உருவாக வேண்டும் என்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

சென்னை செப்டம்பர் -21

செய்தியாளர் -H.M ரிஸ்வான்

சென்னை நகரில் குற்ற வழக்குகளால் பாதிப்படைந்ததாக கண்டறியப்படும் சிறுவர்களை மீட்டு நல்வழிப்படுத்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை நகர காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை நகர காவல்துறை இணைந்து இளஞ்சிறார்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கான சுய தொழில் பயிற்சி மற்றும் திறன் பயிற்சிக்கான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர். நேற்று கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் 47 வழக்குகளில் அறியப்பட்ட இளஞ்சிறார்கள் காவல்துறை ஏற்பாட்டின் பேரில் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு கொண்டு துவக்கி வைத்தனர். பின்பு சிறப்புரையாற்றிய கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால், ‘‘இளஞ்சிறார்கள் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாகவும் குற்றம், மறந்து சுற்றம், அறிந்து தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும். காவல்துறை மூலம் வழங்கப்படும் இந்த தொழில்நெறி பயிற்சி அதற்கு உதவும். மேலும் சமுதாய வளர்ச்சியில் தமிழக அரசும், காவல்துறையும் எடுக்கும் இந்த முயற்சி பல இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும்’’ என்று இளஞ்சிறார்களை வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷ்னர் பாபு, அடையாறு துணைக்கமிஷ்னர் விக்ரமன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்