82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்ஐ மற்றும் காவலர் கொலைவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள்...

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்ஐ மற்றும் காவலர் கொலைவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேருக்கு பரமகுடி செஷன்ஸ் கோர்ட் ஆயுள்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

இராமநாதபுரம் செப் -24

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி உட்கோட்டம்,அபிராமம் காவல் நிலைய சரகம்,நத்தச்சேரி சந்திப்பு சாலை அருகில்,28ம்தேதி 2006-ம் ஆண்டு அபிராமம் காவல் நிலைய தலைமை காவலர் போஸ் என்பவரை சில சமூக விரோதிகள் அருவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதற்காக அபிராமம் காவல் நிலைய குற்ற எண்.53/2006 பிரிவு 147,148, 341,342,307&379(NP) @147, 148, 341,342 307, 120(b),397 IPC படியும்,அன்றே அபிராமம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சுப்ரமணியன் என்பவரும் சில சமூகவிரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அபிராமம் காவல் நிலையத்தில் குற்ற.எண் 54/06/u/s 147,148, 341,342,307,&379(NP) @302& 397 IPC பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் எதிரிகள் 1)சப்பாணி என்ற முருகேசன் வயது 24/ 06, த/பெ முனியசாமி,காடமங்கலம், பெருநாழி, கமுதி, (இருப்பு) கீரைத்துறை, மதுரை.
2)துரை என்ற துரைப்பாண்டி 25/06 (இறப்பு) த/பெ இருளாண்டி கே.வேப்பங்குளம், கமுதி,
3) ஞானவேல்பாண்டியன் 25/06 த/பெ உலகநாதன், மூலக்கரைப்பட்டி, மண்டலமாணிக்கம், கமுதி.
4) ரவி என்ற ரவி சண்முகம், வயது 22/06, த/பெ பெரியசேர்வை,பம்மனேந்தல்,கோவிலாங்குளம்,
5)மூர்த்தி என்ற திருமூர்த்தி வயது 25/06 த/பெ வீமராஜ்,நாரையூரணி,கோவிலாங்குளம்,
6)முத்துராமலிங்கம் 28/06 த/பெ தவசி என்ற இருளாண்டித் தேவர், புதுக்கோட்டை, கமுதி,
7) முத்துராமலிங்கம் என்ற கொரங்கு முத்துராமலிங்கம் வயது 22/06 த/பெ தங்கவேல்,திருவரை, கோவிலாங்குளம், கமுதி,
8)முனியசாமி என்ற தொப்புளி முனியசாமி வயது 24/06 (இறப்பு) த/பெ ராஜபாண்டி, கருத்தறிவான் கிராமம்,கமுதி (இருப்பு) காமராஜபுரம், மதுரை. ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் மேற்படி எதிரிகள் அனைவரும் சேர்ந்து சாலையில் சல்பவர்களை அரிவாளால் வெட்டி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மேற்படி சம்பவ இடத்தில் நின்றபோது அந்த வழியாக போலீஸ் சீருடையுடன் வந்த தலைமை காவலர் போஸ் என்பவரை வழிமறித்து,அவரை அருவாளால் வெட்டி அவரிடமிருந்து தங்க மோதிரம்,இருசக்கர வாகனத்தை பறித்துகொண்டுள்ளனர். பின்னர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் போலீஸ் சீருடையுன் வந்த சார்பு ஆய்வாளர் சுப்ரமணியன் அவர்களை அருவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.மேற்படி இரண்டு வழக்குகளிலும் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பரமக்குடி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் எதிரிகள் A-2 துரை என்ற துரைப்பாண்டி A-8தொப்பளி முனியசாமி இருவரும் இறந்துவிட்டார்கள்.மற்ற எதிரிகளுக்கு விசாரணை முடிந்து இன்று 23ம் தேதி பரமக்குடி, கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிமதி சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக எதிரிகள் A-1,(A-2 இறப்பு),A-3, A-4 , A-5,&A-6 வரையிலான எதிரிகளுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000/-அபராதமும்,தலைமை காவலர் போஸ் என்பவரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக A-1, (A-2 இறப்பு) A-3, A-4, A-5 & A-6 வரையிலான எதிரிகளுக்கு 7 வருடங்கள் தண்டனையும் ,ரூபாய் 2000/-அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்கள். இதில் A-7 முத்துராமலிங்கம் என்ற குரங்கு முத்துராமலிங்கம் என்பவர் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி குற்றவாளிகள் சப்பாணி என்ற முருகேசன் கோயம்புத்தூர் மத்தியசிறைக்கும் மற்ற குற்றவாளிகள் அனைவரும் மதுரை மத்திய சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வழக்கில் கடமையுனர்வுடன் சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கை தண்டனையில் முடிக்க காரணமாக இருந்த நீதிமன்ற அலுவல் புரிந்த அபிராமம் காவல்நிலைய பெண் தலைமை காவலர் சண்முகபிரியா என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வெகுமதி அளித்து பாராட்டியுள்ளார்

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்‌‌‌களை தடுக்க போலீசாருக்கு இரு சக்‌‌‌கர வாகனம்‌‌‌...

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -01,2021 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் சரக காவல்...

தற்போதைய செய்திகள்