81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி இம்மானுவேல் சேகரன் ஜெயந்திவிழாவை தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடவும் வாகனங்களில் இராமநாதபுரம் செல்லவும் தடை ...

இம்மானுவேல் சேகரன் ஜெயந்திவிழாவை தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடவும் வாகனங்களில் இராமநாதபுரம் செல்லவும் தடை எஸ்பி ஜெயக்குமார் அறிவிப்பு !!!

தூத்துக்குடி செப்டம்பர் -08

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்கு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து யாரும் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழா குறித்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக செப்டம்பர் மாதம் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்கு வெளிமாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் யாரும் இம்மானுவேல் சேகரன் ஜெயந்தியில் கலந்துகொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்