5 பெண் இன்ஸ்பெக்டர்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 6 போலீஸ்அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வுக்கான மத்திய அரசின் விருது

0
16

5 பெண் இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்ஐ உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பாக புலனாய்வு செய்ததற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, ‘‘ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் சிறப்பாக புலனாய்வில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அதற்கான விருது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பெருநழி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, புதுக்கோட்டை, கீரனுார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா, நீலகிரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா, பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ வினோத்குமார் ஆகிய 6 அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.