82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு அனுமதி ரத்து நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் அதிரடி

வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு அனுமதி ரத்து நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் அதிரடி

வேளாங்கண்ணி பேராலய விழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மீறுபவர்கள் மீது வழங்கு பதிவு செய்யப்படும்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம் மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் ஆன்மீக சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் செப்டம்பர் எட்டாம் தேதி ஆகும் இதையொட்டி அன்னையின் பிறந்த நாளை பத்து நாட்கள் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும்
வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் முதல் தமிழக அரசால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது இதன் காரணமாக வேளாங்கண்ணி பேராலய விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் மாவட்டம் முழுதும் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் 21 காவல் ஆய்வாளர்கள் 63 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1100 காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் மேலும் இந்த தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் வெளி மாநிலங்களில் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக யாரும் வர அனுமதி இல்லை எனவும் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரையும் தங்க அனுமதிக்க கூடாது எனவும் இதனை மீறும் விடுதி மற்றும் விடுதி உரிமையாளர்கள் மீது சட்ட படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தங்கள் இல்லங்களில் தங்க அனுமதிக்க கூடாது எனவும் மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் , மேலும் பேராலயத்தில் கொடியேற்று நிகழ்வின்போது பேராலய பங்குத்தந்தைகள் உட்பட 30 பேர் மட்டுமே பங்குகொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது மேலும் அவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையே பின்பற்றி பங்குத் தந்தைகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் மேலும் இந்த உத்தரவை நடைமுறை படுத்தி வீட்டில் இருந்து வழிப்பாட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கேட்டுக்கொண்டுள்ளார்

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்