85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி வழக்கறிஞர் நெல்லை பிரம்மா தொடர்ந்த வழக்கில் ஐடிபிஐ வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

வழக்கறிஞர் நெல்லை பிரம்மா தொடர்ந்த வழக்கில் ஐடிபிஐ வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா வி.எம் சத்திரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மநாயகம்(வயது46) மனுதாரானவர்

திருநெல்வேலியில் உள்ள ஐடிபிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பராமரித்து வந்துள்ளார் ஐடிபிஐ வங்கியில்
21.6. 2019 அன்று மனுதாரரான பிரம்மநாயகம் டிடி மற்றும் பணம் டெபாசிட் செய்வதற்காக வங்கிக்கு சென்று உள்ளார்

ஆனால் அந்த வங்கியில் சென்ட்ரலைஸ் ஏசி வேலை செய்யவில்லை என்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்

இதனால் மனுதார் 21.06.2019 அன்று புகார் மனுவும் வங்கி மேலாளரிடம் கொடுத்துள்ளார்

ஆனால் வங்கி மேலாளர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வங்கியில் சென்ட்ரலைஸ் ஏசி வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

அதன் பின்னர் மனுதாரரான பிரம்மநாயகம்

  1. 7 2019 அன்று மீண்டும் வங்கிக்கு சென்ற போது வங்கியில் தொடர்ந்து சென்ட்ரலைஸ் ஏசி வேலை செய்யவில்லை.ஜன்னல் கதவுகள் திறக்கவில்லை அலுவலர்களுக்கு மட்டும் மின்விசிறி ( Federal Fan) வைக்கப்பட்டு இருந்தது நுகர்வோர்க்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. ஆனால் வங்கி கணக்கு தொடங்கும் போது பிரம்மநாயகத்திடம் ஐடிபிஐ வங்கியானது முழுமையாக குளிரூட்டப்பட்ட ஏசி உடன் செயல்படுவதாக சொல்லி வங்கி கணக்கை தொடங்க சொல்லி உள்ளார்கள். ஆனால் அவ்வாறு சொன்ன வங்கியானது நுகர்வோருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி சேவையை வழங்கவில்லை மனுதாரர் மேற்படி இரண்டாம் முறையாக வங்கி இயக்குனரிடம் 2வது எதிர்தரப்பினரிடம் மனுதார் புகார் தெரிவித்துள்ளார். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்
    ஆனால் IDBI வங்கி வழக்கில் ஆஜரராகவில்லை.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற தலைவர் தேவதாஸ் உறுப்பினர் சிவமூர்த்தி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு புகார் மனுவினை விசாரித்து மேற்படி வங்கி நுகர்வோருக்கு சேவை குறைபாடு மற்றும் முறையற்ற வாணிபம் வங்கி புரிந்து உள்ளது என்பதால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் மூளைசூட்டிற்கும் நஷ்ட ஈடாக ரூபாய் 15 ஆயிரமும் வழக்கு செலவு 5000. /- சேர்த்து ரூபாய் 20,000/-வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.மேலும் ஒரு மாத காலத்தில் வழங்க வேண்டும் தவறினால் 6% வட்டியுடன் சேர்த்து வழங்க உத்திரவு பிறப்பித்துள்ளார்கள்

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்