78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ரவுடி‌ முருகன் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி

ரவுடி‌ முருகன் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி

ஆகஸ்ட் – 29

♻️தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரவுடித்தனம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, பல கொலை, கொள்ளை வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடி முருகன் கைது. மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

♻️தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தீவரமாக கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்துள்ளார். இதன் விளைவாக சமூக விரோதிகள் பலர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு வருகின்றனர்.

♻️இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் , ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . முருகப்பெருமாள், தலைமை காவலர் குணசேகரன், காவலர் நாராயணசாமி, குரும்பூர் காவல் நிலைய தலைமை காவலர் வெங்கடாச்சல பெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் வேம்புராஜ், ஆனந்தராஜ், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் இளங்கோ ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரோந்து வந்தபோது பேட்மாநகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ரவுடித்தனம் செய்து வந்த பல கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட ஸ்ரீவைகுண்டம், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தங்கையா மகன் முருகன் என்பவரை கைது செய்தனர்.

இந்த பிரபல ரவுடி முருகன் என்பவருக்கு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ரவுடி வரலாற்றுப்பதிவேடு உள்ளது. இவர் கடந்த 2015ம் ஆண்டு, இவரது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதனை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஏரல் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், மொத்தம் 6 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்