78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி முழு ஊரடங்கு நிலை குறித்து எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு

முழு ஊரடங்கு நிலை குறித்து எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு

ஆகஸ்ட்: 23

இன்று முழு ஊரடங்கை அமல்படுத்தும் காவல்துறையினரின் பணியை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு – சமூக வலைதளங்களில் ஜாதி, மதக் கலவரத்தையோ, பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்தியையோ பரப்புவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நாம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எளிதில் விடுபடலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை 7981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9436 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இது வரை 3529 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3459 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 70 வாகனங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது என்றும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனைகளை தடுப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 எதிரிகள் கைது செய்யப்பட்டு, 27 கிலோ கஞ்சா, திருச்செந்தூரில் 25 கிலோ ‘சரஸ்” என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் அறவே இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஜாதி, மதக்கலவரத்தை தூண்டும் வகையிலோ அல்லது பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்தார் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

இன்று ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் வெளியே வந்ததற்கான காரணங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு கொரோனா ரைவரஸ் தாக்கம் பற்றியும், அதனை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபசுரக்குடிநீர் வழங்கினார்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் ராஜாமணி உட்பட பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்