85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் சென்னை மயிலாப்பூரில் இளம்பெண்ணின் வீட்டை தீவைத்து எரித்த ரவுடி கும்பல் கைது பிரபல ரவுடி தப்பியோட்டம்

மயிலாப்பூரில் இளம்பெண்ணின் வீட்டை தீவைத்து எரித்த ரவுடி கும்பல் கைது பிரபல ரவுடி தப்பியோட்டம்

மைலாப்பூரில் இளம்பெண் வீட்டை தீ வைத்து எரித்த ரவுடி கும்பலைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய போது பிரபல ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் குமாரி (வயது 29). கடந்த 15 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சண்முகம் பிள்ளை தெருவில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றார். திருவிழாவின் போது கோவில் தர்மகர்த்தாவின் செல்போன் காணாமல் போனது. செல்போனை குமாரியின் உறவினரின் மகன் திருடி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனால் மயிலாப்பூர் பிரபல ரவுடி சிவகுமாரின் உறவினரான சாந்தி, தேவி உட்பட பலர் இணைந்து அந்த பகுதியைச் சேர்ந்த பிரேம் என்பவரை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊர் தலைவர் சக்திவேல் சென்று இரண்டு பேரிடம் சமரசமாக பேசி அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மீண்டும் குமாரியின் வீட்டிற்குள் புகுந்து சாந்தி, ரஜினி, வினோத் உட்பட 8 பேர் குமாரியை சரமாரியாக மீண்டும் தாக்கினர். அந்த பகுதியை விட்டு காலி செய்ய வேண்டும் என மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து குமாரி இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ரவுடி சிவகுமாரின் உறவினரான சாந்தி அந்த பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருவதாகவும், ரவுடிகளை வைத்து அராஜகம் செய்து வருவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் தேடுவது தெரியவந்ததும் சாந்தி உட்பட அனைவரும் தலைமறைவாகினர்.

இந்நிலையில் நேற்று விடியற்காலை சாந்தியின் கூட்டாளிகள் 5 பேர் குமாரியின் வீட்டின் கூரையை தீ வைத்தனர். இதில் குமாரியின் வீட்டில் இருந்த புடவைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது. இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

தீ வைத்து விட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடும் போது சாந்தியின் கும்பலைச் சேர்ந்த தமிழ் என்பவர் நிலை தடுமாறி கீழே விழந்தார். இதில் அவருக்கு கால் எலும்பு முறிந்தது. அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ரவுடியின் சிவகுமாரின் சகோதரி சாந்தி உள்ளிட்டோர் குமாரி வீட்டுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாந்தி உள்ளிட்டோரை தேடி வந்தனர். அதனையடுத்து தலைமறைவாக இருந்த சாந்தி, அய்யனார், அரவிந்தன், தமிழரசன், வினோத், கோபி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ரவுடி சிவகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்