94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சென்னை போக்சோ சட்டத்தில் சமரசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் துணை கமிஷ்னர் ஜெயலட்சுமி எச்சரிக்கை

போக்சோ சட்டத்தில் சமரசம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் துணை கமிஷ்னர் ஜெயலட்சுமி எச்சரிக்கை

சென்னை, ஆக. 20–

போக்சோ சட்ட வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் சார்பிலும், சமூக பாதுகாப்பு துறை சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் STOP CHILD ABUSE என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை நிறுத்து என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி நேற்று துவக்கி வைத்தார்.

அதனையடுத்து நிருபர்களிடம் அவர் பேசுகையில், ‘‘சென்னையில் உள்ள அனைத்து மகளிர் 35 காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் மூலம் சென்னை நகர் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்து வருகிறோம். சுமார் 2,000 ஆட்டோக்களில் துண்டு சீட்டை ஒட்டி இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அம்மா ரோந்து வாகனம் மூலமாக ஒலிப்பெருக்கியில், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பது குறித்தும், புகார் அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறோம்.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு அறிமுகப்படுத்திய வாட்ஸப் நம்பர் 9150250665 மூலம் 112 புகார்கள் வந்துள்ளது.

அதில் குடும்பச் சண்டை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அதிக புகார்கள் வருகிறது. மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குழந்தைகள் இடைக்கால இழப்பீடு நிதி தற்போதுதான் வந்துள்ளது. 100 பேருக்கு தேவையான நிதி குறித்து அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம்.

மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் சமரசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது உறவினர்களாக இருந்தாலும் நடவடிக்கை பாயும். குழந்தைகளுக்கும் எதிரான வன்கொடுமை நடந்து அதை தெரிந்தே மறைத்தாலும் அது குற்றம் ஆகும். பொதுவாக பெற்றோர்களும் இது போன்ற விவகாரத்தில் பாதிக்கப்படுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும், ஆனால் தெரிந்தே செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது” என்று துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்