82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் மலர்தூவி அஞ்சலி...

பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்

தூத்துக்குடி மாவட்டம் : 20.08.2020

வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்ட காவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் வீர மரணமடைந்துள்ளார்.

அவருக்கு இன்று (20.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும், அவரது ஆத்மா சாந்தியடைய 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரையாற்றிய போது காவலர் சுப்பிரமணியன் அவர்களின் இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவருக்கு வயது 28, அவருக்கு மனைவி மற்றும் சிவஹரிஷ் என்னும் 10 மாத ஆண் குழந்தை உள்ளது, அவர் நினைத்திருந்தால் தப்பியோடிய ரவுடியை பிடிக்காமல் விட்டு உயிர் தப்பியிருக்கலாம். அவர் கடமைதான் முக்கியம் என்று கருதி, தனது உயிரையும், தனது குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் ரவுடியை பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணடைந்துள்ளார், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார்.

இந்த அஞ்சலியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், மற்றும் கோபி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கணேஷ், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பழனிக்குமார், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்ஆய்வாளர் பாலமுருகன், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னபூரணி, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் ஆய்வாளர் கஸ்தூரி மற்றும் காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் திரு. சுப்பையா, சங்கரன், கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், மாரிமுத்து, நம்பிராஜன் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளாகள், அலுவலக உதவியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்