86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பணியின் போது உயிர்நீத்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு எஸ்.பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல்

பணியின் போது உயிர்நீத்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு எஸ்.பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல்

வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.

கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் வீரமரணமடைந்த காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீட்டிற்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று, காவல்துறை சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து, அவருடைய இழப்பு அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும், நீங்கள் எப்படி அவரை இழந்து மீளாத்துயரில் இருக்கிறீர்களோ, அதே போன்று காவல்துறையில் நாங்கள் எங்கள் உடன்பிறவா சகோதரரை இழந்து வாடுகிறோம்.

இருப்பினும் அவர் மறைந்தாலும் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றென்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும். அவரை இழந்த தங்கள் குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறோம். உங்களுக்கு என்ன உதவி, எந்த நேரத்தில் தேவைப்பட்டாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஏரல் காவல் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்