84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் கிராமத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதை கண்காணிக்க கண்கானிப்பு அறை...

தூத்துக்குடி மாவட்டம் வேலாயுதபுரம் கிராமத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதை கண்காணிக்க கண்கானிப்பு அறை உருவாக்கபட்டு அதை எஸ்.பி ஜெயக்குமார் திறந்துவைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் : 21.08.2020

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலாயுதபுரத்தில் மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமரா ஆங்காங்கே பொருத்தப்பட்டு, அதனை சமுதாயநலக்கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் குற்றங்களை குறைப்பதற்கு சி.சி.டி.வி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதில் ஒரு பகுதியாக இன்று 13 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் 13 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த கேமரா பொருத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள் ஒன்று குற்றம் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டு பிடிப்பது. சென்னையில் அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் குற்றங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்த கேமரா பொருத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சி.சி.டி.வி கேமரா மூலம்தான் பெரும்பாலான குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது என்று சி.சி.டி.வி கேமரா பொருத்துவதன் அவசியத்தையும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியவேண்டும், வீட்டை விட்டு மார்க்கெட் மற்றும் கடைவீதிகளுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். இவை மூன்றையும் கடைபிடித்தால் இதிலிருந்து எளிதாக தப்ப இயலும் என்றும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியம். இளைஞர்கள் நல்வழியை பின்பற்ற வேண்டும், காவல்துறை சட்டப்படிதான் செயல்படும், சட்டத்தை மீறி செயல்பட்டால் உயரதிகாரிகளாகிய எங்களுக்கு தெரிவியுங்கள், காவல்துறை உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தல் ஒரு கிராமத்தில் சி.சி.டி.வி கேமரா பொருத்தபட்டுள்ளது என்றால், அது வேலாயுதபுரம் கிராமம் என்று கூறி வேலாயுதபுரம் தலைவருக்கும், ஊர் மக்களுக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் நன்றி கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த திறப்பு விழாவில் வேலாயுதபுரம் ஊர் நாட்டாமை திரு. மகேஷவரன், திரு. போஸ் உட்பட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன், கழுகுமலை காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்