78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதிய சோதனைசாவடியை எஸ்.பி ஜெயக்குமார் திறந்துவைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதிய சோதனைசாவடியை எஸ்.பி ஜெயக்குமார் திறந்துவைத்தார்

தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று (20.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சோதனைச் சாவடி நீண்ட நாள் கோரிக்கையாகும். அருகில் தென்காசி மாவட்டம் உருவாகியுள்ளது. சோதனைச் சாவடி என்பது மிக, மிக முக்கியமான ஒன்றாகும். முன்பு இந்த சோதனைச் சாவடி சாதாரண கொட்டகையாகத்தான் இருந்தது. இப்போது காவல்துறையினர் வாகன சோதனை பணியை மேற்கொள்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடி அமைந்திருப்பது உங்களுடைய சமுதாயப்பணியில் ஒன்றாக இந்த திறப்பு விழா அமைந்துள்ளது, இந்த சோதனைச் சாவடி கட்டிடம் கட்டுவதற்கு கழுகுமலை மக்கள் அனைவருமே உதவி புரிந்துள்ளனர். எனவே கழுகுலை வாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா நோய் ஒரு மோசமான வியாதி. இந்த வியாதி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளதால் 90 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதனுடைய தாக்கம் இன்னும் நான்கு, ஐந்து மாதங்கள் இருக்கத்தான் செய்யும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும், கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகள் எடுத்துரைத்தார். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருமே இந்த நோய் தாக்கத்தினால் பொருளாதார நெருக்கடியில் மன உளைச்சலில் உள்ளனர், அதனால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களிடம் காவல்துறை பொதுமக்களிடையே நல்ல இணக்கத்துடன், நல்ல உறவுடன் இருக்க வேண்டும் என்றும், காவல்துறை பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை, நாங்கள் உங்களில் ஒருவர்தான், இப்போதுள்ள இந்த நல்லுறவு இனிமேலும் தொடரவேண்டும் என்று சிறப்புரையாற்றி, சோதனைச்சாவடி வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

இந்த திறப்பு விழாவில் கழுகுமலை வர்த்தக சங்கத்தலைவர் திரு. அந்தோணி மற்றும் உறுப்பினர்கள், ஆர்.எம்.ஆர் மில் உரிமையாளர் ரமேஷ், ஊர் நாட்டாமை மகேஷ்வரன், போஸ், பாஸ்கர், ராஜேந்திரன், ராதா கிருஷ்ணன், செந்தில், அருணா, மாரியப்பன், சுப்பிரமணியன், மற்றொரு மாரியப்பன், கருப்பசாமி, முப்பிடாதி, லோகு, பசுபதி, கந்தசாமி ஆகியோர் உட்பட ஊர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கழுகுமலை காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்