82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் அத்திமரபட்டியில் கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரபட்டியில் கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் : 17.08.2020

இன்று (17.08.2020) காலை தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கொரோ வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசியதாவது, கொரோனாவை பொறுத்தவரை கிராமம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று சமூக வலை தளங்கள், செய்தித்தாள் அனைத்திலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. முதலில் இந்த வைரஸ் சென்னையிலிருந்து, நகரங்களுக்கு வந்து, பின் கிராமப் பகுதிகளிலும் இது பரவி வருகிறது. தற்போது இது எல்லா இடங்களிலும் குறைந்திருக்கிறது என்றால் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் 90 சதவீதம் நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும்,

அந்த விழிப்புணர்வு கிராம மக்களிடைய வந்து கொண்டிருப்பதால்தான் இந்த தொற்று எல்லா இடங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கிறது. இது நாளை போய் விடும் என்று நினைக்க முடியாது, குறைந்தது 3, 4 மாதங்கள் வரையிருக்கும், அது வரை உயிர்க்கவசமான இந்த முகக்கவசத்தை அணிய வேண்டும். அதே போன்று அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இந்த கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தலைவர் அழகுராஜா, ஏ.எஸ் நகர் மக்கள் நல்வாழ்வு குடியிருப்போர் சங்க தலைவர் கணேஷ் மற்றும் அத்திரமரப்பட்டி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் உட்பட காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்‌‌‌களை தடுக்க போலீசாருக்கு இரு சக்‌‌‌கர வாகனம்‌‌‌...

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -01,2021 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் சரக காவல்...

தற்போதைய செய்திகள்