82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட எஸ்.பி ஆபிஸில் தென் மண்டல ஐ.ஜி முருகன், தலைமையில் நடைபெற்றது

ஆகஸ்ட் -31

இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் மதுரை, தென்மண்டல ஐ.ஜி முருகன்,தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வக்கூட்டத்தின்போது திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், கோபி ஆகியோர் உடனிருந்தனர்.மேலும்

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் வெகுமதி வழங்கி பாராட்டினார். கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த காவலல்துறையினர் 10 பேருக்கு பழக்கூடை மற்றும் சான்றிதழ் வழங்கி, அவர்களது பணி சிறக்க வாழ்த்தினார். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு மொத்தம் 45,000 முக கவசங்களை அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களிடம் வழங்கினார் மேலும்

சிறப்பாக பணியாற்றியமைக்காக வெகுமதி பெற்றவர்கர்கள் கடந்தமாதம் அன்று அதிகாலை மணியளவில் தோட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்த போது, காரின் உள்ளே இருந்த மூன்று நபர்களை விசாரித்ததில், அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஏழு கொலை வழக்குகள் உட்பட 26 வழக்குகளில் சம்மந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார்(37), பாயைங்கோட்டை படைப்பைகுறிச்சியைச் சேர்ந்த வினோத் மற்றும் திருநெல்வேலி கொக்கிரக்குளம் மேலநத்தத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களை சோதனை செய்து அவர்களிடமிருந்து உரிமம் பெறாத கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள் மற்றும் 2 அரிவாள்களை கைப்பற்றியும் மேற்படி எதிரிகளை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர் வைரமுத்து ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்

♻கொரோனா பெருந்தொற்று காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிந்த நபர்களுக்கு முகக் கவசம் அணிவித்தும் உணவு பொட்டலங்கள் வழங்கியும் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகளின் பாராட்டை பெற்ற முத்தையாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. சேர்மராஜ் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்

♻கடந்த மாதம் தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டேவிஸ்புரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் லோக ஆனந்த்(26) என்பவர் அவரது வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்த சுமார் 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றியும், அவரிடம் விசாரணை செய்து அவரிடம் கிடைத்த தகவலின்படி சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த சின்னகருப்பசாமி மகன் மாடசாமி(80) என்பவரது வீட்டில் இருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு மற்றும் ஆயுதப்படை காவலர்கள் திரு. சக்திமாரி முத்து, . அய்யப்பன் ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்

இரண்டு வாரங்களுக்கு முன்பாக திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி சாலையில் போலீசார் வாகன சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த கனகராஜ் ஆகிய இரு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த 50 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட ‘சரஸ்” என்ற போதைப் பொருட்களை கைப்பற்றிய திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கணபதி, தலைமைக் காவலர் இசக்கியப்பன், ஆத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் எழில் நிலவன் ஆகியோரின் சிறப்பான பணிக்காகவும் வெகுமதி பெற்றனர்

இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், தூத்துக்குடி ஊரகம் பொறுப்பு பழனிக்குமார் , திருச்செந்தூர் பாரத், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், கோவில்ப்பட்டி கலைக்கதிரவன் , விளாத்திக்குளம் பொறுப்பு . நாகராஜன், மாவட்ட குற்ற பிரிவு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்