80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயந்தது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயந்தது எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

ஆகஸ்ட்- 30

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 24 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு – சமூக விரோத செயல்கள் மற்றும் சட்டம் ஓழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிக்கும் பொருட்டு போதைப்பொருள் மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை, ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு, ஜாதி, மதக்கலவரம் தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பொய்யான செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

கடந்த 2 மாதத்தில் மட்டும் 24 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதில் 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 62 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டதில் 30 வழக்குப்பதிவு செய்து, 39 பேர் கைது செய்யப்பட்டு 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதில் 54 வழக்குகள் பதிவு செய்து, 56 பேர் கைது செய்யப்பட்டு 3063 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் 5 நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முழு ஊரடங்கு பணியினை தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் சிட்டி டவர் சந்திப்பிலும், குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்தார்.

அந்த ஆய்வின்போது யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்று கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்குள்ளவர்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

மேலும் தேவையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சுற்றித்திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை 8054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இது வரை 3540 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் சுமார் 26 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்