91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

ஆகஸ்ட-:26

கடந்த 26.07.2020 அன்று கயத்தாறு ஆரோக்கிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சந்தானம் (46) என்பவரை கயத்தாறு காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (47) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கம்பால் தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கிலிபாண்டி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இவ்வழக்கின் எதிரியான மேற்படி சங்கிலிப்பாண்டி என்பவரையும், மேலும் கடந்த 29.07.2020 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் முருகன் (32) என்பவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 16 வயது சிறுமியிடம், தூத்துக்குடி 3 சென்ட், அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் பாலியல் வண்புணரச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி 27.07.2020 அன்று அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி முருகனை கைது செய்தனர். இவ்வழக்கில் மேற்படி முருகன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் . வனிதா

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமிக்கு, ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த ராஜன் என்ற மாகாளிராஜன் (23) என்பவர் தனது செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் 25.07.2020 அன்று அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி ராஜன் என்ற மாகாளிராஜன் கைது செய்தனர். இவ்வழக்கில் மேற்படி ராஜன் என்ற மாகாளிராஜன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பிரேமா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 4 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்க்கு பரிந்துரை செய்தார்

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எதிரிகளான 1) கயத்தாறு காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலிபாண்டி (47), 2) கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் முருகன் (32), 3) தூத்துக்குடி 3 சென்ட், அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த முருகன் (47) மற்றும் 4) ஆத்தூர் ஆவரையூரைச் சேர்ந்த ராஜன் என்ற மாகாளிராஜன் (23) ஆகிய 4 நபர்களையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 4 எதிரிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்