76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரிகேட் என்ற பெயர் வைக்கபட்ட இருசக்கர ரோந்து வாகன தனிப்படையை எஸ்.பி ஜெயக்குமார்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரிகேட் என்ற பெயர் வைக்கபட்ட இருசக்கர ரோந்து வாகன தனிப்படையை எஸ்.பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்

♻தூத்துக்குடி மாவட்டத்தில் ‘பிரிகேட்” (Brigade) என்று பெயர் சூட்டப்பட்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய 16 இரு சக்கர வாகனங்கள் தனிப்படை ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் ‘பிரிகேட்” என அழைக்கப்படும் இரு சக்கர வாகன ரோந்து தனிப்படையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசால் வழங்கப்பட்ட 16 புதிய இரு சக்கர புதிய வாகனங்கள் ஒதுக்கப்பட்டு, அதில் அவசர ஒலிப்பான் (Siron), ஒளிரும் விளக்குகள் (Flashing light), சிறிய ஒலி பெருக்கி ( Public Address System) ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

♻இதனை துவக்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் ஒரு விபத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்யக்கூடிய அளவில், அதற்கான மருந்துப் பொருட்கள் தயார் நிலைய இருக்கும். மொத்தத்தில் நான்கு சக்கர வாகனத்தில் உள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த 16 வாகனங்களில் தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு 5 இரு சக்கர வாகனங்களும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனங்களும், திருச்செந்தூருக்கு 2 இரு சக்கர வாகனங்களும், ஸ்ரீவைகுண்டத்திற்கு 2 இரு சக்கர வாகனங்களும், மணியாச்சிக்கு 1ம், கோவில்பட்டிக்கு 2ம், விளாத்திக்குளத்திற்கு 1ம் மற்றும் சாத்தான்குளத்திற்கு 1ம் என இரு சக்கர வாகனங்கள் ரோந்து பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த ‘பிரிகேட்” விரிவுபடுத்தப்பட உள்ளது.

♻இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் அந்த, அந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களின் உத்தரவுப்படி அவர்கள் பணியாற்ற வேண்டிய இடங்கள் ஒதுக்கப்படும். இவர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளார்கள் என்பதை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை கண்காணித்து கொண்டிருக்கும். பொதுமக்களிடமிருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் அருகிலிருக்கும் இந்த இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டு, அவர்கள் சென்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். இந்த பிரிகேட் தனிப்படையினர் பொதுமக்களுக்கு நல்ல நண்பனாகவும், அவர்களின் அவசர உதவிக்கு விரைந்து சேவைபுரிய வேண்டும் என்றும், தனிப்படையினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

♻இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி ஆயுதப்படை ஆய்வாளர் ஜாகிர் உசேன், உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் ராஜா மற்றும் ஆயுதப்படை காவலர்கள் செய்திருந்தனர். இந்த துவக்க விழாவில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் செல்வன் மற்றும் கோபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்