கடந்த 10.08.2020 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த எதிரிகளை விரைந்து கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஸ்டீபன் இளையராஜா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் .அருண் விக்னேஷ், ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 24.07.2020 மற்றும் 31.07.2020 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான ராமசந்திரன் மற்றும் இளஞ்சிறார் மணிகண்டன் ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்து திருடப்பட்ட நகைகளை மீட்பதற்கு உதவியாக இருந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 12.08.2020 அன்று தூத்துக்குடி வடபாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரித்விராஜ் என்பரை சோதனை செய்த போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.17 லட்சம் மதிப்பிலான 1.25 டன் புகையிலை பொருட்களை கைபற்றியும், மேற்படி வழக்கின் எதிரிகளான பிரித்விராஜ், மகாராஜன் மற்றும் சோலையப்பன் ஆகியோர்களை கைது செய்வதற்கு உதவியாக இருந்த தூத்துக்குடி வடபாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கரன், தூத்துக்குடி வடபாக காவல் நிலைய காவலர்கள் . சரவணக்குமார், மற்றும் முத்துக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 14.08.2020 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி சாலையில் போலீசார் வாகன சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேந்தில்குமார் மற்றும் கனகராஜ் ஆகிய இரு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த 50 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட ‘சரஸ்” என்ற போதையிலை பொருட்களை கைப்பற்றிய திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் . கணபதி, தலைமைக்காவலர். இசக்கியப்பன், ஆத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் எழில் நிலவன், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான சுந்தர், நாகராஜன், அழகுமுத்து மற்றும் அப்பாத்துரை ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்து அவர்களிடமிருந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பணம் ரூ.20,000/- மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களை கைப்பற்றி, புலன் விசாரணை அதிகாரிக்கு உதவியான இருந்த தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, தூத்துக்குடி சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுதாகரன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெடரரிக் ராஜன், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காசி, ஆயுதப்படை காவலர் ரகு ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 15.08.2020 அன்று விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போதுஅந்த வழியாக வந்த வுயுவுயு யுஉந வாகனத்தை சோதனை செய்ததில் அதில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ரூபாய் 4,50,000/- மதிப்புடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றியும், மேற்படி சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மோகன்குமார் மற்றும் மஞ்சுநாதா ஆகியோரை கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காசிலிங்கம், தலைமை காவலர், மாடசாமி, காவலர் முத்து காமாட்சி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 23 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன் உடனிருந்தார்.