76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (Barricades) வழங்கப்பட்டது

தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (Barricades) வழங்கப்பட்டது

தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (Barricades) வழங்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவுக்கு முதற்கட்டமாக 100 தடுப்புகளை (Barricades) இன்று குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை பிரிவுக்கு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர் . சுரேந்திரன், மண்டல மேலாளர் மோகன்ராஜ், முதுநிலை மேலாளர்கள் குமரேசன் மற்றும் முருகேசபாண்டி ஆகியோர் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தடுப்புகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும, அதனை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பின் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் . வெங்கடேஷ், ராஜாமணி, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்