78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கையால் புத்துயிர் பெறும் மாவட்ட காவல்துறை

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கையால் புத்துயிர் பெறும் மாவட்ட காவல்துறை

தூத்துக்குடி மாவட்டம்
காவல்துறை பணிகளில் மிக சவலான ஒன்று அதில் எஸ்பி ஜெயக்குமார் பொறுபேற்ற நாள்முதலே தனது அதிரடியான நடவடிக்கை கான்பித்து வருகிறார்

எஸ்.பி ஜெயக்குமார் ஒரு பார்வை
விருதுநகர் மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட இவர் 1968 ஆம் ஆண்டு பிறந்தார் தனது பள்ளி படிப்பை 5 வகுப்புவரை சவலைநத்தம் என்ற கிராமத்தில் படித்தார் பிறகு 10ம் வகுப்புவரை அருப்புக்கோட்டை உயர்நிலைப்பள்ளி பயின்றார் 11மற்றும் 12 வகுப்பை அருப்புக்கோட்டையில் உள்ள எஸ் பி கே பள்ளியில் முடித்து இளநிலை மற்றும் முதுநிலை வேளாண்மை கல்வியை மதுரை விவசாய கல்லூரியில் முடித்தார்

கல்லூரி படிப்பை முடித்த பிறகு பத்து ஆண்டுகள் விவசாயம் மற்றும் கெமிக்கல் சார்ந்த வேலையை ஆந்திரா கர்நாடகா மற்றும் ஐடிசி கம்பெனிகளிலும் செய்தார் பிறகு 2002 முதல் 2003 வரை இவரின் சொந்தமாவட்டத்தில் ஆசிரியர் பணியினை செய்தார் பிறகு2003 ஆம் ஆண்டு குருப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக தேர்ச்சி பெற்று பயிறச்சி டிஎஸ்பி பணியை நிறைவு செய்த பின் 2004 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் சப்டிவிஷனில் டிஎஸ்பியாக தனது முதல் காவல்துறை பணியினை துவங்கினார்

அதே பகுதியில் 2006 வரை பணியாற்றினார் பிறகு 2006ல் இருந்து 5 மாதங்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சப்டிவிஷனில் பணியாற்றினார் பிறகு 2007 முதல் 2008 வரையில் சென்னை சிசிபி ( CCB)மத்திய குற்ற பிரிவில் உதவி ஆணையராக பணிபுரிந்தார் அப்போதுதான் சென்னையை கலக்கி வந்த பங்க் குமார் என்ற ரவுடியை என்கவுனடர் செய்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார் 2008ல் இருந்து சுமார் 8 மாதங்கள் சென்னை எம் கே பி நகர் சடடம் ஒழுங்கு உதவி ஆணையாராக பணிபுரிந்தார் 2008 முதல் 2010 வரை சென்னை புறநகர் மத்திய குற்ற பிரிவு உதவி ஆணையராக பணிபுரிந்தார் 2010ம் ஆண்டு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை மேற்கு மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பியாக 2013 வரை மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார் பிறகு 2013 ஆம் ஆண்டு எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று 2016 வரை சென்னை மத்திய குற்ற பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்தார்

2016 முதல் 2017 வரை சென்னை வண்ணார்பேட்டை (சட்டம் ஒழுங்கு )துணை ஆணையராக பணிபுரிந்தார் 2017 முதல் 2020 வரை விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்துவந்தார் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை சம்பவத்தின் போது அபபோது எஸ்.பியாக இருந்த அருண்பாலகோபாலன் மாற்றபட்டு விழுப்புரத்தில் இருந்து ஜீலை 7 ம்தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார் பொறுபேற்ற நாள் முதலே மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுபயனத்தை ஆரம்பித்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஜாதி ரீதியான கொலைகள் ஆனவ கொலைகள் கொரவ கொலைகள் போதை பொருட்கள் என பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கி இருந்த நிலையில் இவர் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பினச்சனைகள் ஏராளாம் இருந்தன சந்திக்க வேண்டிய சாவால்கள் அதிகமாகவே இருந்தன

பொறுப்பேற்ற முதல் நாளே இனி சாத்தான்குளம் குளம் சம்பவம் போல் இனி நடைபெறாத வண்னம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகர் புறநகர் திருச்செந்தூர் சாத்தான்குளம் ஞீவைகுண்டம் கோவில்பட்டி விளாத்திகுளம் மணியாட்சி ஆகிய எட்டு சப்டிவிஷன்களிலும் காவல்துறை மற்றும் வியாபாரிகள் நல்லுறவு கூட்டத்தை நடத்தி வியாபாரிகளின் அச்சத்தையும் ஒட்டுமொத்த காவல்துறை மீது இருந்த வெறுப்பையும் நீக்கினார்

பிறகு காவல்துறையினர் பொதுமக்களிடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற அறிவுரைகளையும் காவல்துறையினருக்கு வழங்கினார் கொரனா குறித்த விழிபபுனர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற்றார் காவல்துறையினரை பணிகளில் ஊக்கபடுத்து விதமாக வாரம் ஒரு சப்டிவிஷன் என தேர்வு செய்து அதில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு பாராட்டு மற்றும் வெகுமதிகளையும் வழங்கினார்

இதுநாள் வரை கண்டுபிடிக்க முடியாத கொலை, கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்க தணிபடை அமைத்து பல வழக்குகளை கணடுபிடித்துள்ளார்‌

தடை செய்யபட்டுள்ள குட்கா கஞ்சா சரஸ் போன்ற போதபொருட்களை அடியோடு ஒழிக்கும் விதமாக தனிபடைகள் அமைத்து கண்டுபிடித்து அதனை விற்பனை செய்துவரும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் போதைபொருள் முழுவதுமாக ஒழிந்து வருகிறது

ஜாதி ரீதியான கொலைகள் கூலிப்படை கும்பல் நடத்திவரும் கட்டபஞ்சாயத்து ரவுடிஷம் அதனை அடியோடு ஒழிக்கும் விதமாக அவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து வருகிறார்

இரவு நேரங்களில் குற்றங்கள் நடைபெறாத வண்ணம் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தி வருகிறார்
காவல்துறையினர் காவல்நிலையங்களில் செய்யும் தவறுகள் மற்றும் பொதுமக்கள் சமுகத்தில் செய்யும் குற்றங்கள் சமுகவிரோதிகள் செய்யபோகும் குற்றங்கள் இதனை முன்கூட்டியே அறிந்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் கொடுக்கும் மிக முக்கியமான பணி தனிப்படை காவலர் பணி குற்றங்களை நடக்காமல் தடுக்கும் பணி அதனை சரியாக செய்யாத தனிப்படை காவலர்கள் மற்றும் மூன்று ஆண்டுளுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் படிபுரிந்த எஸ் ஐ உட்பட அனைவரையும் அதிரடியாக மாற்றியுள்ளார்‌

தற்போது 24மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும் அதிநவின இருசக்கர ரோந்து வாகனங்களும் அனைத்து சப்டிவிஷன்களிலும் இயக்க ஏற்பாடு செய்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் போன்றவர்கள் எனது குடும்பத்தில் நல்லது நடந்தால் ஆதரிப்பதும் தவறுகள் நடந்தால் அதை தடுப்பதும் கண்டிப்பதுமே எனது பொறுப்பு அதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள நல்லவைகளுக்கும் தவறுகளுக்கும் நானே பொறுப்பு இந்த என்னத்தில் பணி செய்கிறேன் என்கிறார் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்