80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை திருவண்ணாமலை நகரில் கடையை உடைத்து திருடியவர் கைது அவரிடம் சுமார் 6 லட்சம் ரூபாய் ஹோன்டா...

திருவண்ணாமலை நகரில் கடையை உடைத்து திருடியவர் கைது அவரிடம் சுமார் 6 லட்சம் ரூபாய் ஹோன்டா பைக் வீச்சரிவாள் ஆகியவை பறிமுதல்

திருவண்ணாமலை நகரில் கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. அவரிடமிருந்து 601200/- ரூபாய் பணமும், ஒரு HONDA DIO இருசக்கர வாகனமும், ஒரு வீச்சரிவாள் பறிமுதல்.

திருவண்ணாமலை நகரில் திண்டிவனம் ரோடு, ரயில்வே கேட் அருகில் உள்ள மல்லிகா பர்னிச்சர்ஸ் கடை, வேலூர் சாலையில் உள்ள JK ஆட்டோ ஏஜென்ஸி YAMAHA ஷோரூம், காஞ்சி சாலையில் உள்ள RPS ஹோண்டா ஷோரூம் ஆகிய இடங்களில் தொடர்ந்து கடைகளை உடைத்து பணம் திருடு போனதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .அரவிந்த் உத்தரவின்படி தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அவர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றத்தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா அவர்களின் மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி, திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர்கள் தங்ககுருநாதன், .சுந்தரேசன், சிவாஜி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ‌நாகராஜ், முருகன் தலைமை காவலர்கள் பழனிவேல், திரு.மஞ்சுநாதன், திரு.தியாகராஜன் மணிகண்டன் ஆகியோர்அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று 17.08.2020 ஆம் தேதி காலையில் தேரடி தெரு பூம்புகார் ஷாப்பிங் சென்டர் எதிரில் ஒரு நபர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து கத்தியைக் காட்டி வழிப்பறி செய்ததாக வந்த தகவலை அடுத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை சமுத்திரம் காலனி சந்திப்பு அருகில் குறிப்பிட்ட எதிரியை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தபோது திருவண்ணாமலையில் மல்லிகா பர்னிச்சர்ஸ், JK ஆட்டோ ஏஜென்சி YAMAHA ஷோரூம், RPS மோட்டாஸ் ஹோண்டா ஷோரூம் ஆகிய கடைகளை உடைத்து திருடிய பிரபாகரன், வயது 27,த/பெ. செல்வராஜ், மாரியம்மன் கோவில் 2-வது தெரு, திருவண்ணாமலை என தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்து 601200/- ரூபாய் பணமும், ஒரு HONDA DIO இருசக்கர வாகனமும், ஒரு வீச்சரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 27 திருட்டு சம்பவங்களில் ரூ.17,67,130/-மதிப்பிலான சொத்துக்கள் திருடு போனது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10,21,240/- மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை செய்தியாளர்- தாமோதரன்

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்