காவல்துறை அறிவிப்புதிருவண்ணாமலை மாவட்டம்
திருட்டு, வழிபறி முதலான குற்றங்களை தடுக்க பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
- வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்குச் செல்லும்போது நம்பிக்கையான நபரை காவலுக்கு வைக்கவும் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
- வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கவும்.
- நகைகள் மற்றும் பணத்தை பீரோவில் வைப்பது பாதுகாப்பற்றது.
- வசதி உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு CCTV கேமரா பொருத்துவது திருடர்களை கண்காணிக்க வசதியாக இருக்கும்.
- வீட்டின் முன்பக்க கதவுக்கு பாதுகாப்பான விலை உயர்ந்த பூட்டை பயன்படுத்தி பூட்டவும்.
- இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம், பின்புறம் மின்சார விளக்கை எரியவிடவும்.
- இருசக்கர வாகனங்களை இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே நிறுத்தி வாகனத்தை பூட்டி வைக்கவும்.
- கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை தொட்டால் ஒலி எழுப்பும் ஒலிப்பானை பொருத்துவதன் மூலம் வாகன திருட்டு மற்றும் கார் டேப்ரிக்கார்டர் திருட்டை தடுக்கலாம். உங்கள் வீட்டின் அருகில் அல்லது தெருவில் சந்தேகப்படும்படியான நபர்கள் அல்லது பொருட்கள் மற்றும் வாகனங்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.
- பெண்கள் தகுந்த துணையின்றி வெளியில் வரும்போது நிறைய தங்க நகைகளை அணிந்து வருவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
- கோவில் கும்பாபிஷேகம் திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு செல்லும்போது அதிகப்படியான நகைகளை அணிந்து செல்லவேண்டாம். வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நகைகளை அணிவித்து அழைத்துச் செல்லவேண்டாம்.
- தங்க நகைகளை அணிந்து செல்லும்போது ஆடையுடன் இணைத்து ஊக்கு அணிவதன் மூலம் திருட்டை தவிர்க்கலாம்.
- வங்கிகளுக்குச் செல்லும்போது முடிந்தவரை துணையுடன் செல்லுங்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச வேண்டாம். அதுபோல உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது ஏதாவது கூறினால் அதை அலட்சியப்படுத்திவிடவும்.
- உங்கள் பணப்பரிமாற்றங்கள் மற்றும் நகை விபரங்களை பொது இடத்தில் பேசாதீர்கள். பயணங்களின்போது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணாதீர்கள்.
- பணம் மற்றும் நகைகளை இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வது பாதுகாப்பற்றது.
- பணம் மற்றும் நகைகளை காரில் வைத்து பூட்டிவிட்டு செல்வது கூடாது. ஏனெனில் திருடர்கள் கண்ணாடியை உடைத்து திருடிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
- தோஷம் உள்ளது என்று சொல்லி பூஜை செய்ய வருபவர்கள் பித்தளை, செம்பு ஆகியவற்றை மாற்றி தருபவர்கள் என்று யாராவது வந்தால் அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்காதீர்கள்.
- எலக்ட்ரீஷியன், டெலிபோன் ரிப்பேர், செய்பவர் கழிவறை சுத்தம் செய்பவர், தச்சு வேலை செய்பவர், ஷோபா ரிப்பேர் செய்பவர், கேஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்பவர் என்று யார் வந்தாலும் அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்காதீர்கள்.
- தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத்தருவதாகச் சொல்லி யார் வந்தாலும் நகைகளைக் கொடுக்க வேண்டாம். பாலீஷ் போடுபவரை போல உங்களை மோசடி செய்துவிடுவார்கள்.
- அறிமுகம் இல்லாத நபர்கள் வந்து தண்ணீரோ அல்லது மற்றவை ஏதாவது கேட்டாலோ தங்களது வீட்டின் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்து பதில் சொல்லவும்.
- ATM CARD எண் இரகசிய எண் ஆகியவற்றை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். எந்த வங்கியும் போன் மூலம் ATM Card எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்காது.