திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்

0
17

திருச்சி மாவட்டம், 14.8.2020 அன்று நவல்பட்டு காவல் நிலையப் பகுதியில் உள்ள சீனிவாசா என்ற திருமண மஹாலில், கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு,மற்றும் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவெரும்பூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்.சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.ஆனி விஜயா மரக்கன்றுகளை நட்டு வைத்தும், காவலன் செயலி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினார். உடன் காவல் ஆய்வாளர் அஜீம், அமுத ராணி, திட்ட ஒருங்கிணைப்பாளர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.