80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கேட்பாரற்று வெயிலில் கிடந்த பெண்ணை மீட்ட காவல் ஆய்வாளர்!!!

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கேட்பாரற்று வெயிலில் கிடந்த பெண்ணை மீட்ட காவல் ஆய்வாளர்!!!

கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த சூழலில் உறவினர்களைக் கூட தொட்டு உதவுவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று மரத்தடி ஓரம் முடியாமல் கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் திருச்சி உறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிராஜ். திருச்சி அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மருந்தகம் எதிரே இருந்த மரத்தடி மண்ணில் படுத்து எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய காவல் ஆய்வாளர், அருகில் இருந்த டீ கடைக்கு சென்று டீ வாங்கி வந்து அவருக்கு கொடுத்ததோடு, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் சொல்லி அவரை சிகிச்சைக்கு ஸ்ட்ரக்சர் கொண்டு வரச்சொல்லி அனுப்பி வைத்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மற்றுமொரு பெண் காவலரும் இணைந்து உதவினார். கொரோனா நோய் தொற்றினால் ஒருவருக்கு ஒருவர் அருகில் நிற்கவே அச்சப்படும் சூழலில், மரத்தடி ஓரம் கிடந்த பெண்ணை மீட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளரின் செயல் காண்போரை நெகிழச் செய்தது.
இந்த மனிதாபிமான மிக்க செயலை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெகுவாக பாராட்டினார்

PC @ TRICHY Vission.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்