86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை மாதவரத்தில் ஐஓபி வங்கி ஏடிஎம் மிஷின்களை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை மாதவரத்தில் ஐஓபி வங்கி ஏடிஎம் மிஷின்களை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை, ஆக. 19–

சென்னை மாதவரத்தில் பாங்க் ஆப் இந்தியா, ஐஓபி வங்கி ஏடிஎம் மிஷின்களை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செங்குன்றம் ஜிஎன்டி சர்வீஸ் ரோட்டில் உள்ள எம்ஏ நகரில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை உள்ளது. அதனை ஒட்டியபடி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று 18.08.20 தேதி இரவு 7 மணியளவில் வங்கியை ஊழியர்கள் மூடி விட்டு சென்றனர். அதன் அருகே உள்ள ஏடிஎம் மிஷின் உள்ள அறை மட்டும் பொது மக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக எப்போதும் திறந்தே இருக்கும். இந்நிலையில் நேற்று இரவு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஏடியும் மிஷினை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்றுள்ளனர். ஏடிஎம் மிஷினின் முதல்கதவை திறந்த அவர்களால் உள்புறம் இருந்த கதவை உடைக்க முடியவில்லை. கொள்ளை முயற்சி தோல்வியைடைந்து போனதால் அப்படியே விட்டுச் சென்றனர். இன்று (19.08.2020) காலை 11 மணிக்கு வங்கியின் மேலாளர் வந்து பார்த்த போது ஏடிஎம் மிஷினின் கதவுகள் உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அது தொடர்பாக செங்குன்றம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அங்கு இரவு காவலாளி நியமிக்கப்படவில்லை. அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வங்கியின் மேலாளர் ரஞ்சித்குமார் புகார் அளித்துள்ளார்.

அதே போல சென்னை செங்குன்றம், காமராஜர் நகர், பைபாஸ் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையத்திலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் தளத்தில் வங்கியும், தரைத்தளத்தில் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. நேற்று 18.08.20 மாலை 5 மணியளவில் பணி முடிந்து வங்கி மூடப்பட்டது. இரவு ஏடிஎம் மிஷின் உள்ள அறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவை எளிதில் உடைக்க முடியாததால் உடனே அங்கிருந்து சென்று விட்டனர். இன்று காலையில் வங்கி மேலாளர் பிரபாகரன் வந்து பார்த்த போது ஏடிஎம் மிஷின் உடைக்க நடந்தது முயற்சி பற்றி சிசிடிவி கேமரா மூலம் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது தொடர்பாக அவர் மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளார். மாதவரம் போலீசார் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்