82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் திருடுபோன விலை உயர்ந்த செல்போன்கள் பூக்கடை சைபரக்ரைம் போலீசார் துரிதமாக கண்டுபிடித்தனர்

சென்னையில் திருடுபோன விலை உயர்ந்த செல்போன்கள் பூக்கடை சைபரக்ரைம் போலீசார் துரிதமாக கண்டுபிடித்தனர்

சென்னை, ஆக. 17–

சென்னை பூக்கடை காவல் மாவட்டத்தில் சைபர்கிரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் 10 செல்போன்கள் மீட்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைபர் கிரைம் தனிப்படையை கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.

சென்னை நகரில் சைபர் குற்றங்களை தடுத்து அவற்றை குறைக்கும் நோக்கில் 12 காவல் மாவட்டங்களிலும் துணைக்கமிஷனர் அலுவலகங்களில் சைபர்கிரைம் காவல் நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. சென்னை பூக்கடை துணைக்கமிஷனர் அலுவலகத்தில் சைபர்கிரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன், துணைக்கமிஷனர் கார்த்திக் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதன்படி சைபர்கிரைமில் செல்போன் டவர்களை கண்டறிவது, முகவரிகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட வசதிகள் செயல்படுத்தப்பட்டன. பூக்கடை சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு கொத்தவால்சாவடி எஸ்ஐ ரபேல் லுயிஸ் மற்றும் முத்தியால்பேட்டை முதல்நிலை காவலர் ஆனந்த்பாபு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் புலனாய்வு பணியில் உள்ளனர். பூக்கடை காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் காணாமல் போனதாக வந்த புகார்கள் குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். காணாமல் போன செல்போன்களின் ஐஎம்இஐ எண்களை வைத்து போலீசார் அவற்றை பயன்படுத்துபவர்களை கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி அவற்றை பறிமுதல் செய்தனர். இதுவரை மொத்தம் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பூக்கடை காவல் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் பிரிவு தொடங்கப்பட்ட 1 வாரத்துக்குள் 10 செல்போன்கள் மீட்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் பூக்கடை துணைக்கமிஷனர் கார்த்திக் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்‌‌‌களை தடுக்க போலீசாருக்கு இரு சக்‌‌‌கர வாகனம்‌‌‌...

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -01,2021 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் சரக காவல்...

தற்போதைய செய்திகள்