86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் காவலரை வெட்டி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுக் கொலை

சென்னையில் காவலரை வெட்டி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுக் கொலை

சென்னையில் கான்ஸ்டபிளை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி அதிகாலை நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு ரவுடியின் வயிற்றில் பாய்ந்து உயிரைப்பறித்தது.

சென்னை அயனாவரம், கே.கே நகர் பகுதியை சேர்ந்தவன் சங்கர் என்கிற இளநீர் சங்கர் (வயது 48). இவன் மீது 3 கொலைகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 51 வழக்குகள் உள்ளன. அயனாவரம் காவல் நிலைய ஹிஸ்டரி ஷீட் ரவுடியான இவன் சிறைப்பறவையாக வலம் வந்துள்ளான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சங்கர் போலீசுக்குப் பயந்து அயனாவரத்தில் இருந்து வெளியேறி தலைமறைவாக இருந்தான். சங்கரின் தம்பி கதிர்வேலுவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்கோஷ்டியின் வெட்டிக்கொலை செய்தனர். அதற்கு பழிவாங்கும் விதமாக தம்பியைக் கொன்ற யமஹா பாலாஜி என்ற ரவுடியை சங்கர் கொடூரமாக கொலை செய்தான். திருமுல்லைவாயல் பகுதியில் தனது தந்தையின் நினைவு தினத்துக்கு வந்த யமஹா பாலாஜியை நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்துக்குள் புகுந்து அவனை அறையில் அடைத்து தனது கூட்டாளிகளுடன் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்தான் சங்கர். வெட்டிய கத்தியை பாலாஜியின் தலையில் சொருகி வைத்து விட்டுச் சென்றது சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரையே கதிகலங்க வைத்தது. பிரேத பரிசோதனையின் போதுதான் அந்த கத்தி அகற்றப்பட்டது.

அதே போல மதுரவாயலில் மாமூல் கேட்டு தராததால் பில்டிங் காண்ட்ராக்டரின் தம்பியை கொலை செய்தது உள்ளிட்ட மூன்று கொலை வழக்குகள் சங்கர் மீது உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்த சங்கர் பின்பு வழக்குகளுக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானான். அயனாவரம் பகுதியில் உள்ள தொழில் அதிபர்கள், கடைகளில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சங்கர் மாமூல் வசூலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அயனாவரம் சூப்பர் மார்கெட் வாசலில் காங்கிரஸ் பிரமுகர் சரவணன் என்கிற சதீஷ் என்ற காங்கிரஸ் பிரமுகர் தனக்கு மாமூல் தராதததால் அவரை பயமுறுத்துவதற்காக சங்கர் தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் வெட்டியுள்ளான்.
அது தொடர்பாக சரவணன் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப்பறந்த சங்கர் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததால் அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜன், எஸ்ஐ யுவராஜ் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சங்கரை தேடி வந்த நிலையில் சென்னை நீலாங்கரை பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் சங்கரை சுற்றிவளைத்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் முதல் சென்னை நகரில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும், அயனாவரம் நியூ ஆவடி சாலை, ஆர்டிஓ அலுவலகம் எதிரில் உள்ள முட்புதரில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். கஞ்சாவை பறிமுதல் செய்வதற்காக இன்ஸ்பெக்டர் நடராஜன், எஸ்ஐ யுவராஜ், காவலர் முபாரக் மற்றும் இரண்டு காவலர்கள் நேற்று அதிகாலை 6.30 மணியளவில் அவனை அங்கே அழைத்துச் சென்றனர்.

அந்த முட்புதர் பகுதிக்கு சென்று சங்கர் கஞ்சாவை தேடுவது போல அங்கே பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜனை வெட்ட வந்துள்ளார். அப்பொழுது காவலர் முபாரக் தடுக்க முயன்றுள்ளார். இதில் அவருக்கு தோள்பட்டையில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. அடுத்த வெட்டுக்கு சங்கர் இன்ஸ்பெக்டரை நோக்கி அரிவாளை ஓங்கிய போது சுதாரித்த இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து சங்கரை தப்பியோடாதே சரண்டர் ஆகி விடு என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதையும் மீறி சங்கர் இன்ஸ்பெக்டரை வெட்டப்பாய்ந்த போது அவர் தனது துப்பாக்கியால் சங்கரை நோக்கி சுட்டார். இதில் சங்கரின் வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இதில் சங்கர் சுருண்டு விழுந்தான். அவனை 108 ஆம்புலன்சில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு துாக்கி சென்றனர். அவன் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், இணைக்கமிஷனர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடந்த இடத்தை பார்வையிட்டனர். அரிவாள் வெட்டுப்பட்ட காவலர் முபாரக் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

போலீஸ் கமிஷனர் பேட்டி:
–––––––––––––––––––––
காயமடைந்த காவலர் முபாரக்கை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) காலை 6.30 மணி அளவில் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் ரவுடி சங்கர் போலீசாரை வெட்ட முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். காவலர் முபாரக்கை வெட்டி விட்டு இன்ஸ்பெக்டரையும் தாக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் சுட்டதில் வயிற்றில் குண்டு பாய்ந்து சங்கர் இறந்துள்ளார். சங்கர் மீது 5 பிடிவாரண்டுகள் இருக்கிறது. அவர் மீது 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற உள்ளது. சென்னையில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

சங்கர் கைதாகி சிறையில் இருக்கும் பொழுது ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த குற்றவாளிகளை பழக்கப்படுத்திகொண்டு அங்கே பதுங்கியிருந்து சுதந்திரமாகச் சுற்றித்திரிந்துள்ளார். தனது ஆட்களை வைத்து ரவுடி மாமூல் வசூல் செய்த பணத்தில் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளான்.

இதனால் போலீசார் இவருக்கு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சங்கர் கொரொனா லாக்டவுனில் தனது ஆதரவாளர்களுக்கு அயனாவரம் தொழிலதிபர்கள் பலரிடம் மிரட்டிமாமூல் வசூல் செய்து செலவுக்கு பணம் கொடுத்துள்ளார்.
மேலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் பதுங்கிய சங்கரை பிடிக்க அயனாவரம் இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி டீம் நெருங்கியது. அதனையறிந்து கொண்ட சங்கர் தானாக வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பின்னர் ஜாமினில் வெளிவந்தபிறகு தலைமறைவான நிலையில் இப்போது என்கவுன்டரில் பலியாகியுள்ளார்.

: கடந்த 2007 ஆம் வருடம் அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடிகள் ஞானம், நொன்டி கார்த்திக் ஆகியோருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சங்கரை கொல்ல அவர்கள் சமயம் பார்த்து வந்துள்ளனர்.

அதில் இருந்து தப்பிய சங்கர் ஞானம்,மற்றும் நொன்டி கார்த்திக்கை பழி தீர்க்க காத்திருந்த நிலையில், 2009ம் ஆண்டு சங்கரின் தம்பியான கதிர்வேலுவை வெட்டிக் கொலை செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் ஞானம் மற்றும் நொன்டி கார்த்திக் பக்கபலமாக இருந்த அவரது சித்தப்பா விஜி(எ) கஞ்சா விஜியை 2010 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்து பழி தீர்த்தனர் சங்கர் தரப்பினர்.

சங்கரின் வழக்குகளை கையாண்டு வந்த பாமக வழக்கறிஞரான வன்னி சம்பத் எதிர் தரப்பினர் அந்த ஆண்டே கொலை செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அயனாவரத்தில் இருந்து வெளியேறி சங்கர் தலைமறைவாக இருந்தார்.

சங்கரின் அம்மா இளநீர் வியாபாரம் செய்து வந்தார். அதனால் சங்கரின் பெயரோடு இளநீரும் ஒட்டிக் கொண்டது. சங்கர் என்ற பெயரில் ஏராளமான ரவுடிகள் இருந்ததால் காவல்துறை பதிவேட்டில் அவன் பெயர் அயனாவரம் சங்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 1996-ம் ஆண்டு ரவுடியிசத்தில் இறங்கிய சங்கர் மீது அயனாவரம் போலீஸ் நிலையத்தில் 2010-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு, 2013-ல் அடுத்த கொலையும், 2017ம் ஆண்டு திருமுல்லைவாயலில் 3வது கொலை வழக்கும் பதிவாகியுள்ளது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்