78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சிறப்பாக பணிசெய்த எஸ் .ஐ உட்பட 14 போலீஸீக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு

சிறப்பாக பணிசெய்த எஸ் .ஐ உட்பட 14 போலீஸீக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் :24.08.2020

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த 18.08.2020 அன்று பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுத்து என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கிராமத்தில் சுற்றித் திரிவதாக கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படையினர் மணக்கரை ஜங்ஷன் அருகில் ஒரு அறையில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்து மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் பிடிக்க சென்ற போது, தனிப்படையினரை தாக்க முயற்சி செய்து தப்பிக்கும் போது மூன்று நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ரவுடி துரைமுத்து மட்டும் அங்கிருந்த வல்லநாடு வனப்பகுதியில் தப்பி ஓடும் போது அவரை காவலர் திரு. சுப்பிரமணியன் துரத்தி சென்று பின் பக்கமாக பிடித்தபோது ரவுடி துரைமுத்து கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில், காவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வெடித்து தலைசிதைந்து சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இதில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். ரவுடியை பிடிக்க உயிரையும் பணயம் வைத்து பணிபுரிந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப் பெருமாள், தலைமை காவலர் குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடாச்சலபெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் வேம்புராஜ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய காவலர் நாராயணசாமி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் இளங்கோ ஆகியோரின் சிறப்பான பணிக்காகவும்

தூத்துக்குடி மத்தியபாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கடத்தல் வழக்கில், கடத்தப்பட்ட நபரான வெங்கடஷே; என்பவரை கடத்தப்பட்ட 1 மணி நேரத்தில் மீட்பதற்கும், அவ்வழக்கின் எதிரிகளான காளிதாஸ் மற்றும் சீனிக்குட்டி ஆகியோரை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜ், தட்டப்பாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. விக்னேஷ் மற்றும் புதியம்புத்தூர் காவல் நிலைய காவலர் திரு. சுடலைமுத்து ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 22.08.2020 அன்று கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மாப்பிள்ளையூரணி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ்ச்செல்வன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் இருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, தலைமை காவலர் மோகன் ஜோதி, காவலர் சிலம்பரசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 21.08.2020 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம், தண்ணீர் துறை பேருந்து நிறுத்தம் அருகில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக தக்க சமயத்தில் தகவல் தெரிவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராஜேஷ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்