82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் சென்னை கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த உதவி கமிஷ்னர் உட்பட தனிபடையினருக்கு சென்னை கமிஷ்னர் பாராட்டு

கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த உதவி கமிஷ்னர் உட்பட தனிபடையினருக்கு சென்னை கமிஷ்னர் பாராட்டு

சென்னை, ஆக. 20–

கொள்ளையர்களை கைது செய்த சென்னை மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை சிறந்த பணியாற்றியதற்காக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

சென்னை, பெரும்பாக்கம், முதல்மெயின் ரோடு, ராதா நகரைச் சேர்ந்தவர் இந்து (வயது 35). கடந்த 11ம் தேதியன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் இந்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் சவரிநாதன் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட், எஸ்ஐக்கள் இளங்கனி, ராஜேந்திரன், தலைமைக்காவலர்கள் பாஸ்கர், மடிப்பாக்கம் தலைமைக்காவலர் ஜெபசிங், சிட்லப்பாக்கம் முதல் நிலைக்காவலர் கலைச்செல்வன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் மேற்கொண்ட புலனாய்வில் இந்த வழக்கில் தொடர்புடைய பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (51), சோழிங்கநல்லுார் குமார் (வயது 44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 40 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், 5 கைக்கடிகாரங்கள், 1 பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்