81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரியம் அமைப்பது குறித்து எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம்...

ஓய்வுபெற்ற காவலர்களுக்கான நலவாரியம் அமைப்பது குறித்து எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது

ஆகஸ்ட் :26

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரிய” கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கான குறைகளை கேட்டறிந்து. அவர்களது குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ‘ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரியம்” அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பத்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கான நல வாரியம் அமைத்து அதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரியத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ராமசாமி, ஸ்டெல்லா, உதவி ஆய்வாளர்கள் ஜெபமணி, சேதுராஜ், பால்ராஜ், ஞானசெல்வம், மாரியப்பன், ராமலிங்கம், சுப்பையா ஆகியோரும்,

காவல்துறையில் பணியாற்றி வரும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மீஹா, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் பாண்டியன், தலைமை காவலர்கள் முருகேஸ்வரி, முத்துச்செல்வி ஆகியோரும் இந்த நலவாரியத்தில் அங்கத்தினர்களாக உள்ளனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் குறைகளை கேட்டறிந்தார். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். உங்களுக்கு எந்த குறைகள் இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் இந்த வாரிய காவல் ஆய்வாளர் திருமதி. மீஹா அவர்களிடம் தெரிவிக்கலாம். உங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இந்த நல வாரியக்கூட்டம் மாதம் தோறும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல வாரியத்தைச் சேர்ந்த ஒய்வு பெற்றவர்கள் மற்றும் பணியிலுள்ள காவல்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்