82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளிவரும் நிலையில் தூத்துக்குடியில் பதற்றம்...

இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளிவரும் நிலையில் தூத்துக்குடியில் பதற்றம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் 1000த்திறக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் : 18.08.2020

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தனியார் தாமிர ஆலை சம்மந்தமாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 1100 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (18.08.2020) தூத்துக்குடி தனியார் தாமிர ஆலை சம்மந்தமாக ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்” விசாரணை நடைபெற்று வரும் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது.

ஆகவே தற்போது தமிழகம் முழுவதும் குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144 அமலில் இருப்பதால் தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்தும், தீவிர ரோந்து அலுவல் செய்தும், சமூக விரோதிகளை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பாதுகாப்பு பணியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 46 காவல் ஆய்வாளர்கள், 85 உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், உள்ளுர் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மொத்தம் 1100 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இன்று (18.08.2020) அதிகாலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு எங்கெங்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது, அவர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்