79.6 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் சென்னை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் காவலரின் வீட்டிற்‌‌‌கு சென்று போலீஸ் கமிஷனர் ஆறுதல்

எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் காவலரின் வீட்டிற்‌‌‌கு சென்று போலீஸ் கமிஷனர் ஆறுதல்

சென்னை – அக் – 14,2021

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், தேனாம்பேட்டையில் சைக்கிள் ரோந்தின்போது, இருசக்கர வாகனம் மோதி தோள்பட்டை எலும்பு முறிவடைந்து சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, புதிய சைக்கிள் பரிசளித்தார்.

தலைமைக் காவலர் (த.கா.எண்.36163) M.செந்தில்குமார், வ/44, த/பெ.முனுசாமி என்பவர், E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். தலைமைக் காவலர் செந்தில்குமார் தினந்தோறும் சைக்கிளிலிலேயே ரோந்து பணி மேற்கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் செந்தில்குமார், நேற்று (12.10.2021) மதியம் சுமார் 12.30 மணியளவில், பணியின்போது, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, அண்ணா அறிவாலயத்திலிருந்து, காவல் நிலையம் நோக்கி சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம், தலைமைக் காவலரின் சைக்கிள் மீது மோதியதில், இருவரும் நிலை குலைந்து கீழே விழுந்து காயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்ததில், தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு இடது தோள்பட்டை அருகில் Collar Bone முறிவடைந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பசுல்லா என்பவருக்கு உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. எலும்பு முறிவுக்கான சிகிச்சை பெற்ற தலைமைக் காவலர் செந்தில்குமார் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். மேலும், மேற்படி விபத்து சம்பவம் குறித்து, தலைமைக் காவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.., இன்று ஆலந்தூர், M.K.N. சாலையிலுள்ள காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு வசித்து வரும் தலைமைக் காவலர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து, காயம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவ பரிசோதனைகள், ஊடுகதிர் படங்களை (X-ray) பார்வையிட்டு, மருத்துவ ஆலோசனைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தினார். மேலும், மேற்படி தலைமைக் காவலர் பெரும்பாலும் சைக்கிளில் ரோந்து செல்வது தெரியவந்ததால், காவல் ஆணையாளர் அவர்கள் விபத்தின்போது சேதமடைந்த சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை தலைமைக் காவலர் செந்தில்குமாருக்கு பரிசாக வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

பின்னர் ஆலந்தூர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்