89.5 F
Tirunelveli
Sunday, October 17, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காவலர்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ பொதுமக்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காவலர்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ பொதுமக்களுக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திருச்சி – அக் -12,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே கடந்த 11.10.2021ம் தேதி காலை 06:30 மணி அளவில், சுமார் 20 நபர்களை ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கரூர் மார்க்கமாக சென்ற மார்கோபோலோ வேனை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக இயக்கி சென்றபோது, அவ்வழியே சென்ற அரசு பேருந்து மற்றும் சிறிய வகை கண்டைனர் லாரி ஆகியவற்றின் மீது மோதி தானாக சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, அவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 16 நபர்களும் காயங்களுடன் வேனிற்குள் சிக்கித் தவித்ததைகண்ட, விபத்துப் பகுதிக்கு அருகில் வசித்துவந்த பொதுப்பணித்துறை ஊழியர்களும், பொதுமக்களும், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த காவலர்களும் துரிதமாக செயல்பட்டு விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் காயம் பட்டவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததால் அவர்கள் அனைவரும் உயிர்சேதமின்றி தப்பித்தனர்.

இவ்வாறு காவல்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்டு விபத்து ஏற்பட்ட சில மணித்துளிகளில் காயம் பட்டவர்களை மீட்டதை, அப்பகுதி பொதுமக்களும், சாலையில் பயணம் செய்த பயணிகளும், காயம் பட்டவர்களும் மனதாரப் பாராட்டினார்

இக்குழுவினரின் செய்கையை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். பா. மூர்த்தி இ.கா.ப விபத்தில் உதவியவர்களை நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்