80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் ஈரோடு "எரித்து கொள்ளபட்ட நபர் மனநிலை பாதிக்கபட்டவரா ?- போலீஸ் விசாரனை

“எரித்து கொள்ளபட்ட நபர் மனநிலை பாதிக்கபட்டவரா ?- போலீஸ் விசாரனை

ஈரோடு – ஜீலை -22,2021

ஈரோடு கருங்கல் பாளையம், நஞ்சப்பா நகர் காவிரி ஆற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் ஈமக்காரியங்கள் செய்வதற்காக திறந்தவெளி கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் இன்று காலை பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அவரது உடல் அருகே ரத்தக்கறையும் படிந்து இருந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூரை சேர்ந்த உசேன்சேட்டு (52) என்பதும், திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் நஞ்சப்பா நகர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், நேற்றிரவு மர்ம நபர்கள் உசேன் சேட்டுவை தலையில் கல்லால் தாக்கியுள்ளனர். பின்னர் உயிருக்கு போராடிய அவரை தீ வைத்து எரித்து கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கை
ஈரோடுமாவட்ட எஸ்‌‌‌.பி சசிமோகன் IPS அவர்களின் உத்தரவுபடியும் டவுன் டி.எஸ்‌‌‌.பி  ராஜு  ஆலோசனைபடியும் காவல்ஆய்வாளர் கோபிநாத் தலமையில் எஸ்‌‌‌.ஐ மோகன்ராஜ், தலைமை காவலர்‌‌‌  கல்யாணசுந்தரம் தனிப்பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொலைசெய்த RNபுதூர் பிரகாஷ் என்பவரை துரிதமாக கைது செய்தனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்