80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி "இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகளுக்கானகாவல் சிறுவர்,சிறுமியர் மன்றம் துவக்கம்‌‌‌...

“இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகளுக்கான
காவல் சிறுவர்,சிறுமியர் மன்றம் துவக்கம்‌‌‌…

திருச்சி – ஜீலை – 22,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார். அவர்களது குறைகளை கேட்ட மாநகர காவல் ஆணையர் அவர்கள் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடந்த19.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம் வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் – பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் – SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொதுநலம்,எழும்பியல்,தோல், இதயம்,வயிறு,காது, மூக்குமற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,மருந்துகள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில்,கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்காக,காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) இன்று 22.07.2021 திருச்சி மாநகர சட்‌‌‌டம்‌‌‌ ஒழுங்‌‌‌கு துணை  ஆணையர் சக்திவேல் தலைமையேற்று துவக்கி வைத்தார்.மேலும்,ஜமால் முகமது கல்லூரி நிர்வாக இயக்குநர் அப்துல் காதர் நிஹால்,Pearl Drust நிர்வாக இயக்குநர் முனைவர். இராமச்சந்திரன்,கண்டோன்மெண்ட சரக காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு),காவல் ஆய்வாளர்கள்,காவல் ஆளிநர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 150 சிறுவர் மற்றும் சிறுமியர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இம்மன்றத்தில் குழந்தைகளுக்கானபுத்தகங்கள்,பல்வேறு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்ச்சியானது சமூக இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் இந்த காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றமானது தங்களது குழந்தைகளுக்கு நல்வழிகாட்டும் வகையிலும்,சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும்,இம்மன்றம் அமைவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்