79.5 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் சென்னை "விழிப்புடன் செயல்பட்டு நடக்கவிருந்த கொலையை தடுத்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு....

“விழிப்புடன் செயல்பட்டு நடக்கவிருந்த கொலையை தடுத்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு….

சென்னை – ஜீலை – 22,2021

அபிராமபுரம் காவல் நிலையம், இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு, நடக்கவிருந்த சம்பவத்தை தடுத்து, 3 வாள்கள், 1 கத்தி மற்றும் 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய, E4 அபிராமபுரம் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் இராமச்சந்திரன் ( கா.எண் .56871 ) மற்றும் ஆயுதப்படை காவலர் தினகரன் ( கா.எண் . 55675 ) ஆகியோர் கடந்த 15.07.2021 அன்று இரவு அபிராமபுரம் , வாரன் ரோடு சந்திப்பில் பணியிலிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் நடுரோட்டில் பேசிக்கொண்டிருந்த 4 நபர்கள், காவலர்களை கண்டவுடன் இருசக்கர வாகனங்களை போட்டுவிட்டு ஓடியதை தொடர்ந்து, 2 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி சோதனை செய்தபோது, ஒரு கோணிப்பையில் இருந்த 3 வாள்கள் மற்றும் 1 கத்தியை கைப்பற்றினர். அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், ரமேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக, கார்த்திபன் என்பவரை கத்தியால் தாக்குவதற்காக, அவரது நண்பர்களுடன் மேற்படி இடத்திற்கு கத்திகளுடன் வந்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் ரமேஷ் (வ/24) மயிலாப்பூர் என்பவரை கைது செய்தனர்.
இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு, நடக்க இருந்த அசம்பாவிதத்தை தடுத்த அபிராமபுரம் காவல் நிலைய காவலர் இராமச்சந்திரன் மற்றும் ஆயுதப்படை காவலர் தினகரன் ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப, நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்