93.2 F
Tirunelveli
Wednesday, April 14, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

தூத்துக்குடி – பிப் – 25 ,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு தமிழக அரசு வழங்கிய ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் நிவாரணத் தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியில், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 19 பேருக்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு ரூபாய் 2,70,000 வழங்கியுள்ளது. இந்த நிவாரணத் தொகையை வங்கி வரைவோலையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

இதில் விளாத்திக்குளம் தாலுகா, துலுக்கன்குளம் காலணித்தெருவைச் சேர்ந்த சாந்திமுருகன் மகன் திரு. மாரீஸ்வரன் என்பவரை கடந்த 02.05.2019 அன்று எதிரிகள் கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து விளாத்திக்குளம் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதே போன்று விளாத்திக்குளம் தத்தனேரி நடுத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆண்டி என்பவரை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம்தேதி அன்று எதிரிகள் கொலை செய்ய முயன்றனர். மேற்படி இவர்கள் உட்பட 19 குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,735FansLike
29FollowersFollow
345SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற வியாபாரிகளுடான‌ கொரனா விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் போலீஸ்...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான்‌ இன்று மாலை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக...

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்...

0
அரியலூர் - ஏப்ரல் - 13 ,2021 அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு மற்றும்...

பணியின்போது உயிர் நீத்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதல்வர் நிவாரண...

0
தென்காசி - ஏப்ரல் - 13 ,2021 தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்...

சென்னை தி.நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு...

0
சென்னை - ஏப்ரல் - 14 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள...

சென்னை மாநரம் முழுவதும் போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில் கொரனா தடுப்பு விதிமுறைகள் ...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு...

தற்போதைய செய்திகள்