81.7 F
Tirunelveli
Wednesday, April 14, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் மேற்கு மண்டல ஐஜி தினகரன் ஒரு பார்வை

மேற்கு மண்டல ஐஜி தினகரன் ஒரு பார்வை

கோயம்புத்தூர் – பிப் – 24 , 2021

மேற்கு மண்டல ஐ.ஜியாக செயல்பட்டு வந்த பெரியய்யா சென்னை நகர பொதுபிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மேற்கு மண்டல புதிய ஐ.ஜி யாக சென்னை தெற்கு பகுதி கூடுதல் கமிஷ்னராக பணியாற்றிவந்த தினகரன் இன்று பொறுப்பேற்றுகொன்டார்‌ இவர் முன்பே கோயம்புத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றியவர் இவர் பணியாற்றிய இடங்கள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் இவர் 1988 முதல் 1992 வரை கோயம்புத்தூர் வேளான் கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை படித்தார் பிறகு அதே கல்லூரியில்1993 முதல் 1995 வரை எம்.எஸ்.சி வேளாண் கல்வியில் தங்கப்பதக்கம் பெற்றார்‌ பிறகு நியு டெல்லியில் இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தில் 1995 முதல் 1998 வரை வேளாண்மை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்

பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானார் 1999முதல் 2000 வரை பயிற்சி ஏஎஸ்பியாக மதுரையில் பணியாற்றினார் பயிற்சி முடித்து முதல் காவல்பணியை விழுப்புரம் ஏஎஸ்பியாக தொடங்கி 2000முதல் 2002வரை இரண்டு ஆண்டுகள் திறம்பட பணியாற்றினார் பிறகு எஸ்.பி.யாக பதவிஉயர்வு பெற்று கோயம்புத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக 2002 முதல் 2005 வரை பணியாற்றினார் பின்னர் அங்கிருந்து மாறுதலாகி 2005 முதல் 2006 வரை தேனி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றினார் அங்கிருந்து மாறுதலாகி திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னராக 2006 முதல் 2007 வரை பணியாற்றினார் அங்கிருந்து 2007 முதல் 2008 வரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக பணியாற்றினார் பிறகு 2008 முதல் 2009 வரை கரூர் எஸ்.பியாக பணியாற்றினார்

‌பின்னர்‌ 2010 முதல் 2011வரை ஓராண்டு திண்டுக்கல் எஸ்.பியாக பணியாற்றினார் அங்கிருந்து மாறுதலாகி 2011முதல் 2012 வரை சென்னை ரயில்வே எஸ்.பியாக பணியாற்றினார் பின்னர் அங்கிருந்து டிஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ரயில்வே டி.ஐ.ஜி யாக பணியாற்றினார் 2012 முதல் 2014 வரை சென்னை போக்குவரத்து இணை கமிஷ்னராக பணியாற்றினார் ‌பின்னர் அங்கயே 2014 முதல் 2015 சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை கமிஷ்னராக பணியாற்றினார் ‌பின்னர் அங்கிருந்து மாறுதலாகி 2016 முதல் 2017 வரை திருநெல்வேலி சரக டிஐஜி யாக பணியாற்றினார் அதே ஆண்டில் அங்கிருந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை கமிஷ்னர் அலுவலக நிர்வாக பிரிவு கூடுதல் கமிஷ்னராக பணியாற்றினார் அதே ஆண்டு முதல் 2018 வரை எஸ்டாபிலிஷ்மன்ட் பிரிவில் பணியாற்றினார் பின்னர் 2018 முதல் 2020 வரை சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷ்னராக பணியாற்றினார் ‌பின்னர் 2020 முதல் 2021வரை சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷ்னராக பணியாற்றினார் அங்கிருந்து பணிமாறுதலாகி மேற்கு மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுள்ளார் 2013ஆம் ஆண்டு சிறந்த பணிக்காக ஜனாதிபதி விருதும் 2019 ஆம் ஆண்டு சிறந்த மக்கள் சேவை பணிக்காக முதலமைச்சர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

19,735FansLike
29FollowersFollow
345SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற வியாபாரிகளுடான‌ கொரனா விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் போலீஸ்...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான்‌ இன்று மாலை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக...

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்...

0
அரியலூர் - ஏப்ரல் - 13 ,2021 அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சாலை பாதுகாப்பு மற்றும்...

பணியின்போது உயிர் நீத்த 3 காவலர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதல்வர் நிவாரண...

0
தென்காசி - ஏப்ரல் - 13 ,2021 தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலையத்தில் பணியின் போது உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலையா, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்...

சென்னை தி.நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு...

0
சென்னை - ஏப்ரல் - 14 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள...

சென்னை மாநரம் முழுவதும் போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில் கொரனா தடுப்பு விதிமுறைகள் ...

0
சென்னை - ஏப்ரல் - 13 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு...

தற்போதைய செய்திகள்