தூத்துக்குடி – பிப் – 24 ,2021
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எஸ்.ஐ பாலுவை கொலை செய்த முருகவேல் மற்றும் சாத்தான்குளம் பாலியல் வழக்கில் தொடர்புடைய சின்னத்துரை உட்பட கஞ்சா விற்பனை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை.
பிப்ரவரி 1ம்தேதி அன்று ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு அவர்களை இரவு ரோந்து பணியின் போது தீப்பாச்சி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் (39) என்பவர் சரக்கு வாகனத்தை பயன்படுத்தி கொலை செய்த வழக்கில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி முருகவேல் என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான முருகவேல் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னதுரை (29) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணை பிப்ரவரி 11ம்தேதி அன்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னதுரை என்பவரை கைது செய்தனர். மேற்படி வழக்கின் எதிரி சின்னதுரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர்
ஜனவரி 31ம்தேதி அன்று சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட மேல்மந்தை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி (65) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். மேற்படி வழக்கில் தொடர்புடைய மாடசாமி என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் ,
சேராகுளம், செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் 2 செல்போன்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்களை திருடிய ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கந்தசாமி (எ) கண்ணன் (22) மற்றும் வெல்லூர் வேதக்கோவில் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (19) ஆகியோர் மீது சேராகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேற்படி வழக்கின் முக்கிய எதிரியான கந்தசாமி (எ) கண்ணன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாரள்களின் அறிக்கையின் அடிப்படையில் 4 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மேற்படி எதிரிகளான தீப்பாச்சி நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் மேல்மந்தை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி செம்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னதுரை ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கந்தசாமி (எ) கண்ணன் ஆகிய 4 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 4 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.