கன்னியாகுமரி -பிப் -22 ,2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் நவீன
தொழிநுட்பத்துடன் இயங்ககூடிய சுழலும் கேமரா பொருத்திய கண்காணிப்பு
நிலையம் அடங்கிய வாகனத்தை சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு வழங்கப்பட்டு அதனை
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் துவங்கி
வைத்தார்.
இந்த வாகனமானது முக்கிய விழாக்களின் பாதுகாப்பு பணிக்காகவும் ,
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் , நவீன கண்காணிப்பு கேமரா
பொருந்திய இந்த வாகனம் பயன்பாட்டில் இருக்கும். இந்த வாகனத்தில்
சுழன்று படம் பிடிக்கும் நவீன கேமரா உள்ளதால் பாதுகாப்பு பணியில் ஈடூபடும்
போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை எளிதாக படம் பிடித்து செயலிகள்
(80) மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட முடியும்.
இந்த வாகனத்தில் உள்ள பெரிய திரையில் மாவட்ட காவல்துறையின்
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வுக்காக
திரையிடப்படும்.
இந்த வாகனத்தின் சிறபம்சங்கள் …
1272 கேமராவிற்கான உயரமான மோட்டார் பொருத்தபட்ட பொறியியல்
தொழில்நுட்பம்.நவீனமயமாக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள்.
நிகழ் நேர தொலை நிலை கண்காணிப்பு மற்றும் காப்பகம்.விசைப்பலகை கட்டூபாட்டுகளுடன் கூடிய 40 கண்காணிப்பு
நிலையம்.வெளியரங்கமான திரையரங்கம் மற்றும் நல்ல ஒளிமயமான விளக்குகள்.ஆகியவைகளை உள்ளடக்கியது