86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு சிறப்பாக பணியாற்றிய 14 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய 14 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு

தூத்துக்குடி – பிப்- 22 ,,2021

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தலைமைறைவாக இருந்த பாராத்ராஜ் என்பவரை கைது செய்த சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், முதல் நிலை காவலர் கண்ணன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 19ம்தேதிஅன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டிணம் பகுதியில் வெட்டு சீட்டு விளையாடிய எதிரிகள் 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து பணம் ரூ. 1,17,000 ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர் இசக்கியப்பன் மற்றும் முதல் நிலை காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை காவல் நிலைய வழக்கில் காணாமல் போன பெண்ணை பீகார் மாநிலம், தானாபூர் மாவட்டம் சென்று கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், பெண் தலைமை காவலர் . சுகிதா மற்றும் முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற 2 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரை விரல் ரேகை மூலம் அடையாளம் காண உதவியாக இருந்த தனிவிரல் ரேகை பதிவு கூடம் உதவி ஆய்வாளர்கள் அருணாசலம், செல்வி. வைஜெயந்திமாலா மற்றும் தலைமை காவலர் . திருமுருகன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் நடை பெற்ற மணல் திருட்டு வழக்குகளில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த எட்டையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் சிவக்குமார், காவலர் வடிவேல் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

விளாத்திகுளம் காவல் நிலைய வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி கடந்த 18ம் தேதி 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,500 அபராதம் கிடைக்க செய்த விளாத்திகுளம் காவல் நிலைய காவலர் மகேந்திரன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இப்பாராட்டு நிகழச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்