தூத்துக்குடி – பிப் – 22,2021
தூத்துக்குடியில் சமீபத்தில்தான் உடல்நலக்குறைவால் காலமான முதல் நிலைக்காவலர் ராஜேஷ்வரன் குடும்பத்திற்கு 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி ரூபாய் 12, 64, 364பணத்தை மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் ராஜேஷ்வரன் குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. ராஜேஷ்வரன் என்பவர் கடந்த ஆண்டு டிசமபர் 04 ம்தேதி உடல்நலகுறைவால் காலமானார். மேற்படி ராஜேஷ்வரன் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற நிதியுதவி செய்ய வேண்டும் என்ற கருணையுள்ளத்தோடு, அவருடன் 2008ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 2100 சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூபாய் 12, 64, 364/- பணம் நன்கொடை பெற்று, அந்தப் பணத்தை ராஜேஷ்வரன் அவர்களின் தந்தை திரு. சுடலைமணி அவர்களுக்கு வங்கி காசோலையாக கொடுத்துள்ளனர் அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 2008ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் ராஜேஷ்வரன் குடும்பத்தினருக்கு மேற்படி காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் தனிப்பிரிவு காவல்
ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒற்றுமையுணர்வுடனும், கருணையுள்ளத்தோடும் மேற்படி நிதியை வழங்கிய 2008ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 2100 காவலர்களின் இந்த பெரிய நிதியுதவி அளித்தமைக்காக பாராட்டுவதாக தெரிவித்தார். இந்த இழப்பு, ராஜேஷ்வரன் அவர்களது குடும்பத்திற்கு ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்று உறுதியளித்தார்.
காவல்துறையினர் அயராத பணியின் நடுவே கருணையுள்ளத்தோடு இந்த நிதியை திரட்டிய 2008ம் ஆண்டு காவலர்கள் குழுவைச் சேர்ந்த கடலூரிலிருந்து சிவராஜன், தென்காசியிலிருந்து சின்னதம்பி, திருநெல்வேலியிலிருந்து சுதாகரன், தூத்துக்குடியிலிருந்து லெட்சுமிநாதன், . வேல்மணி. ஸ்டெல்லாமேரி, மாரியப்பன், முனீஸ்வரன், பாபநாசசெல்லதுரை, . ராஜ்குமார், ரவி, செந்தில்குமார், முத்துமணி, தங்கமாரியப்பன், கார்த்திக், . கணேசன், அம்சுராஜா, கருப்பசாமி, லெட்சுமி, சுப்புலெட்சுமி, சுவர்ணலெட்சுமி, சகாய ரோஸ்லின் ரஞ்சிதா, முருகேஸ்வரி மற்றும் பாக்கியலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.