சென்னை – பிப் – 21 ,2021
நமது நிருபர் : ஹெச்.எம்.ரிஸ்வான்
சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு பிரிவுளில் காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் என சுமார் 20,000 ஆண் மற்றும் பெண் காவல் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் முதல் காவல் உயரதிகாரிகள் வரையிலான அந்தஸ்திலுள்ள அனைத்து காவல் அலுவலகர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் , தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது பெரும்பாலான காவல் ஆளிநர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் , பண சலுகைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து அறியாமல் உள்ளதால், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் உத்தரவின்பேரில் காவலர்கள் அறிந்து கொள்ளும் வகையில் , தமிழக அரசு மற்றும் காவல்துறையின் காவலர் நலத்திட்டங்கள் குறித்த கையேடு தயாரிக்கப்பட்டது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கான நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினை நேற்று வெளியிட்டார். பின்னர் சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் , இந்த கையேடு வழங்கப்படும் என்றும் , காவல் ஆளிநர்கள் இக்கையேட்டினை பெற்று பயன் பெறலாம் என காவல் ஆணையாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது , சென்னை பெருநகர காவல் தலைமையிட கூடுதல் கமிஷ்னர் அமல்ராஜ் மருத்தவர் என் கண்ணன் ,( தெற்கு ) பவானீஸ்வரி , ( போக்குவரத்து ) , வித்யா ஜெயந்த் குல்கர்னி , ( மத்திய குற்றப்பிரிவு ) , இணை கமிஷ்னர்கள் மற்றும் துணை கமிஷ்னர்கள் கலந்து கொண்டனர்