86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை மாம்பலம் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் மதிப்புள்ள 1240 கிலோ குட்கா...

சென்னை மாம்பலம் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் மதிப்புள்ள 1240 கிலோ குட்கா பறிமுதல் தனிப்படையினருக்கு – போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

சென்னை – பிப் – 20 ,2021

நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்‌

மாம்பலம் பகுதியில் குட்காவுடன் சாகனாராம் என்பவரை கைது செய்து, கிடங்கில் பதுக்கி வைத்த 1,240 கிலோ குட்கா மற்றும் பணம் ரூ.1,22,430 கைப்பற்றுதல் செய்த தி.நகர் காவல் குழுவினரை சென்னை பெருநகர‌ போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு நடவடிக்கையான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை” என்பதின் தொடர்ச்சியாக. தி.நகர் காவல் துணை கமிஷ்னர் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைக்காவலர் முரளி மற்றும் முதல்நிலைக் காவலர் தமேஷ்வர் (மு.நி.கா. 28665) ஆகியோர் 17ம்தேதி அன்று மதியம் மாம்பலம், பர்கிட் ரோடு, தண்டபாணி ரோடு சந்திப்பு அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக இரண்டு கைப்பையுடன் நின்றிருந்த நபரை சோதனை செய்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த சாகனாராம், 24, அம்பத்தூர் என்பவரை பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் குற்றவாளி சாகனாராம் மேற்படி முகவரியில் உள்ள வீட்டில் பெருமளவு குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து சென்னையிலுள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், அவரிடமிருந்து 1,240 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் பணம் ரூ.1,22,430 கைப்பற்றப்பபட்டது.மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல் குழுவினரை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்