86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு தமிழ்நாடு 17 வது மாநில அளவிலான வூசூ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசுகள் வழங்கி...

17 வது மாநில அளவிலான வூசூ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசுகள் வழங்கி பாராட்டினார்

தூத்துக்குடி – பிப் – 20 ,2021

தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வூசூ கழகம் இணைந்து நடத்தும் 17வது மாபெரும் மாநில அளிவிலான வூசூ போட்டி தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வூசூ கழகம் இணைந்து நடத்தும் 17வது மாபெரும் மாநில அளிவிலான வூசூ போட்டி தூத்துக்குடியில் பானுபிருந்தாவன் வளாக திருமண மண்டபத்தில் 19.முதல் 21ம்தேதி வரை ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

இப்போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, திருப்பூர், தர்மபுரி, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவாரூர், கரூர், திருவள்;ர், திருச்சி, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இன்று பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 600 பேர் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தற்காப்புக் கலை விளையாட்டுப்போட்டியின் இந்திய அளவிலான நடுவர் சபீர், தமிழ்நாடு மாநில அளவிலான நடுவர் தங்கபாண்டியன், தமிழ்நாடு வூசூ கழகத்தின் பொதுச் செயலாளர் ஜான்சன், மாவட்ட விளையாட்டு கழக தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலம் மற்றும் மாவட்ட வூசூ கழக உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், வூசூ போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்