86 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் சென்னை நவீன சுழலும் கேமரா பொருத்தப்பட்ட காவல் வாகனத்தை பயன்பாட்டிற்க்காக இன்று மாவட்ட எஸ்.பி தொடங்கி...

நவீன சுழலும் கேமரா பொருத்தப்பட்ட காவல் வாகனத்தை பயன்பாட்டிற்க்காக இன்று மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்‌

கன்னியாகுமரி – பிப் – 20 ,2021

கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் வாராந்திர கவாத்தில் கலந்து கொண்டார்.

மேலும் மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் தலைவர்கள் கூட்டம், ஆர்ப்பாட்டம், முக்கிய விழாக்களில் பாதுகாப்பு பணிக்காகவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும். அசம்பாவிதங்கள் ஏதுவும் ஏற்படாமல் தடுக்கவும், நவீன கண்காணிப்பு கேமரா பொருத்திய காவல் வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் எல்லா திசைகளிலும் சுழன்று படம் பிடிக்கும் நவீன கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை படம் பிடித்து பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட முடியும்

அதனுடன் ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதங்களை வைப்பதற்கு புதிய ஆயுத வைப்பறையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் அவர்களும், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சாம் வேதமணிக்கம் அவர்களும் கலந்து கொண்டனர்‌

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்