75.2 F
Tirunelveli
Friday, February 26, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் சாலையில் வலிப்புவந்து உயிருக்கு போராடிய முதியவருக்கு ஓடோடி சென்று உதவிய ஆயுதபடை காவலர்...

சென்னையில் சாலையில் வலிப்புவந்து உயிருக்கு போராடிய முதியவருக்கு ஓடோடி சென்று உதவிய ஆயுதபடை காவலர் சதாமுக்கு போலீஸ் கமிஷ்னர் நேரில் பாராட்டு

சென்னை – பிப் – 20 ,2021

நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

சாலையில் வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவருக்கு உதவி செய்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்த ஆயுதப்படை காவலர் சதாம் உசேன் என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் சதாம் உசேன் (கா.56047) பிப்ரவரி 07 ம்தேதி அன்று காலை, போரூர் சந்திப்பு அருகே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியிலிருந்தபோது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 50 வயது நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு வந்து தவித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட காவலர் சதாம் உசேன் தனது கையிலிருந்த சாவியை அந்த பெரியவரிடம் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தார். சுமார் அரை மணி நேரம் அந்த பெரியரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததும், அவ்வாகனத்தில் அந்த பெரியவரை ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

மனித நேயத்துடன் ஆபத்தில் இருந்த பெரியவருக்கு உதவிய ஆயுதப்படை காவலரை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

17,007FansLike
19FollowersFollow
341SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 19 பேருக்கு...

தூத்துக்குடியில் சாலைவிபத்து குறித்து தகவல் சேகரிக்கும் இனையதள பயிற்சி வகுப்பு மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - பிப் - 25 ,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை விபத்து குறித்த தகவல் சேகரிக்கும் இணைய...

சலவை தொழிலாளியின் நேர்மையை கண்டு வியந்து சேலம் போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து...

0
சேலம் - பிப் - 25 ,2021 சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில்...

மாணவ மாணவிகளிடம் நெல்லை துணை கமிஷ்னர் கலந்துரையாடல்

0
திருநெல்வேலி - பிப் - 25 , 2021 மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்...

குடிசை வாழ் குழந்தைகளின் திறனை மேம்படுத்த சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் ஆர்வம்

0
சென்னை - பிப் - 25 ,2021 நமது நிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை...

தற்போதைய செய்திகள்